惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
Google DeepMind News
Google DeepMind News
MyScale Blog
MyScale Blog
A
About on SuperTechFans
Martin Fowler
Martin Fowler
M
MIT News - Artificial intelligence
Recent Announcements
Recent Announcements
D
DataBreaches.Net
B
Blog
博客园 - 【当耐特】
爱范儿
爱范儿
有赞技术团队
有赞技术团队
P
Proofpoint News Feed
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Last Week in AI
Last Week in AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
雷峰网
雷峰网
量子位
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காய்ச்சல், சளி, தொண்டை மற்றும் உடல் வலியுடன் மக்கள் அவதி:...
2026-05-23 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: காய்ச்​சல், சளி, தொண்டை வலி, உடல் வலி​யுடன் மக்​கள் அவதிப்​பட்டு வரும் நிலை​யில், இது கரோனா தொற்று பாதிப்​பாக இருக்​குமா என்ற அச்​சம் ஏற்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் சில வாரங்​களாக வெயி​லின் தாக்​கம் அதி​கரித்து வரு​கிறது. இதனால், உடலில் நீர்ச்​சத்து இழப்பு போன்ற பிரச்​சினை​களால் ஏராள ​மானோர் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர்.

பொது​மக்​களின் வசதிக்​காக, அரசுமருத்​து​வ​மனை​களில் ஓஆர்​எஸ் கரைசல் வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதேநேரம், டைபாய்​டு, டெங்கு உள்​ளிட்ட பல்​வேறு காய்ச்​சல்​களால் பலர் பாதிக்​கப்​பட்டு அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

காய்ச்​சலுக்கு சிகிச்சை பெறு​பவர்​கள் 3 அல்​லது 4 நாட்​களில் குணமடைந்து வந்த நிலை​யில், தற்​போதைய காய்ச்​சல்​ ஒரு​வாரத்​துக்கு மேல் ஆகி​யும் குணமடைய முடி​யாத நிலை உள்​ளது.

அது​வும் குறிப்​பாக, கரோனா தொற்​றுக்கு இருந்​ததை போல், காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் இரு​மல், தொண்டை வலி, சளி தொந்​தர​வு, இரு​மல், கடுமை​யான உடல்​வலி போன்​றவை​களால் அவதிப்​பட்டு வரு​கின்​றனர்.

இதனால், மீண்​டும் கரோனா தொற்று பரவல் தொடங்​கி​யுள்​ளதா என்ற அச்​சம் பொது​மக்​களிடம் ஏற்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பொது சுகா​தா​ரத்​துறை அதி​காரி​களிடம் கேட்ட போது, “தமிழகத்​தில் டெங்கு உள்​ளிட்ட காய்ச்​சல்​களை கட்​டுப்​படுத்த தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

அரசு மருத்​து​வ​மனை​களில் ஓஆர்​எஸ் கரைசல் இலவச​மாக வழங்​கப்​படு​கிறது. பொது​வாக காய்ச்​சல்​களுக்​கான அறிகுறிகள் ஒரே மாதிரி தான் இருக்​கும். கரோனா தொற்று காலத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட பரிசோதனை​கள் போல் தற்​போது செய்​வ​தில்​லை.

தேவையனவர்​களுக்கு வேண்​டும் என்​றால் கரோனா பரிசோதனை மேற்​கொள்​ளு​மாறு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது” என்​றனர்.

அரசு மருத்​து​வர்​களிடம் கேட்டபோது, “காய்ச்​சலால் பா​திக்​கப்​பட்​ட​வர்​கள் கரோனா தொற்று பரிசோதனை செய்​யு​மாறு கேட்​டால்​, பரிசோதனை செய்யப்படும்” என்றனர்.