惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
云风的 BLOG
云风的 BLOG
人人都是产品经理
人人都是产品经理
T
The Blog of Author Tim Ferriss
阮一峰的网络日志
阮一峰的网络日志
罗磊的独立博客
J
Java Code Geeks
博客园 - 聂微东
B
Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
WordPress大学
WordPress大学
腾讯CDC
L
LangChain Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
D
DataBreaches.Net
The GitHub Blog
The GitHub Blog
美团技术团队
博客园 - Franky
Google DeepMind News
Google DeepMind News
V
V2EX
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
月光博客
月光博客
The Cloudflare Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதல்: பிளே ஆஃப் சுற்றுக...
2026-05-24 · via hindutamil

Updated on

2 min read

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் - ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி (நிகர ரன் விகிதம் 0.783), முன்​னாள் சாம்​பியன்​களான குஜ​ராத் டைட்​டன்ஸ் (0.695 ), சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் (0.524) ஆகிய அணி​கள் தலா 18 புள்​ளி​களு​டன் முதல் 3 இடங்​களை பிடித்து பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறி​விட்​டன.

மீதம் உள்ள ஓர் இடத்​துக்கு பஞ்​சாப் கிங்​ஸ், ராஜஸ்​தான் ராயல்​ஸ், கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், டெல்லி கேப்​பிடல்ஸ் ஆகிய அணி​கள் மல்​லுக்​கட்​டு​கின்​றன. 2007-ம் ஆண்டு சாம்​பிய​னான ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் இன்று 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யுடன் மோதுகிறது.

ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 13 ஆட்​டங்​களில் விளை​யாடி 7 வெற்​றி, 6 தோல்வி​களு​டன் 14 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற வேண்​டு​மா​னால் இன்​றைய ஆட்​டத்​தில் கட்​டா​யம் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறது ராஜஸ்​தான் அணி. இன்​றைய ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி வெற்றி பெற்​றால் 16 புள்​ளி​களு​டன் எந்​த​வித சிக்​கலும் இல்​லாமல் கடைசி அணி​யாக பிளே ஆஃப் சுற்​றில் கால்​ப​திக்​கும்.

மாறாக இன்​றைய ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி தோல்வி அடைந்​தால் பஞ்​சாப் (13 புள்​ளி​கள்), கொல்​கத்தா (13 புள்​ளி) அணி​களின் கடைசி ஆட்​டத்​தின் முடிவுக்​காக காத்​திருக்க நேரிடும். ராஜஸ்​தான் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் 221 ரன்​கள் இலக்கை துரத்​திய ராஜஸ்​தான் அணி 5 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி கண்​டிருந்​தது. வைபவ் சூர்​ய​வன்ஷி 93 ரன்​களும், துருவ் ஜூரெல் 53 ரன்​களும், யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 43 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்​கு​வகித்​தனர்.

இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்​கூடும். அதேவேளை​யில் வான்​கடே மைதானத்​தின் அளவு சிறிது என்​ப​தால் இதை ராஜஸ்​தான் அணி​யின் டாப் ஆர்​டர் பேட்​ஸ்​மேன்​கள் சரி​யாக பயன்​படுத்​திக் கொள்ள முயற்​சிக்​கக்​கூடும். கடந்த 3 வருடங்​களுக்கு முன்​னர் இதே மைதானத்​தில் ஜெய்​ஸ்​வால் தனது முதல் ஐபிஎல் சதத்தை விளாசி​யிருந்​தார். இதனால் அவர், மீது மீண்​டும் எதிர்​பார்ப்பு உள்​ளது.

கேப்​டன் ரியான் பராக் தொடை பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக கடந்த ஆட்​டத்​தில் களமிறங்​க​வில்​லை. ஆனால் இம்​பாக்ட் பிளேயர் பட்​டியலில் அவரது பெயர் இடம் பெற்​றிருந்​தது. இது பல்​வேறு கேள்வி​களுக்கு வழி​வகுத்​தது. இதுகுறித்த விளக்​கம் அளித்த ரியான் பராக், அணிக்கு ஆலோ​சனை வழங்​கு​வதற்​காகவே இம்​பாக்ட் பிளேயர் பட்​டியலில் இருந்​த​தாக தெரி​வித்து இருந்​தார்.

ரியான் பராக்​கின் காயத்​தின் தன்​மையை ராஜஸ்​தான் அணி​யின் மருத்​து​வக்​குழு​வினர் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர். இன்​றைய ஆட்​டம் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது என்​ப​தால் அவர், முழு உடற்​தகு​தியை அடைந்து களமிறங்​கு​வார் என அணி நிர்​வாகம் நம்​பிக்​கை​யுடன் உள்​ளது.

ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்​தி​யன்​ஸ் அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை எப்​போதோ இழந்​து​விட்​டது. எனினும் ஆறு​தல் வெற்​றி​யுடன்​ தொடரை நிறைவு செய்​வ​தில்​ அந்​த அணி தீவிரம்​ காட்​டக்​கூடும்.