惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
IT之家
IT之家
Hugging Face - Blog
Hugging Face - Blog
J
Java Code Geeks
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 叶小钗
MyScale Blog
MyScale Blog
G
Google Developers Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 三生石上(FineUI控件)
Google DeepMind News
Google DeepMind News
Engineering at Meta
Engineering at Meta
The Cloudflare Blog
Martin Fowler
Martin Fowler
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
N
Netflix TechBlog - Medium
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
WordPress大学
WordPress大学
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தருவைகுளம் அருகே 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கடல்சார் ...
2026-04-27 · via hindutamil

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே பனையூரில் கண்டெடுக்கப்பட்ட கடல்சார் புதை படிமங்கள்.

Updated on

2 min read

கோவில்பட்டி: தூத்​துக்​குடி மாவட்​டம் தருவைகுளம் அருகே கண்​டெடுக்​கப்​பட்ட கடல்​சார் புதை படிமங்​கள் 10 ஆயிரம் ஆண்​டு​களுக்கு முற்​பட்​டவை என இந்​திய விலங்​கியல் ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

மேலும் கீழக்​கரை முதல் திருச்​செந்​தூர் வரையி​லான கடற்​கரை மண்​டலத்தை ‘பண்​டைய கடல்​சார் பாரம்​பரிய மண்​டல​மாக’ அறிவிக்க வேண்​டும் என கோரிக்கை எழுந்​துள்​ளது.

தரு​வை​குளம் அருகே பட்​டினமருதூர், பனையூர் பகு​தி​களில் பழமை வாய்ந்த செவ்வக வடிவி​லான கிணறு,முது​மக்​கள் தாழி, பழமை​யான ஓடு​கள், இரும்​பு​கள், பழங்​கால நாண​யங்​கள் கண்​டெடுக்​கப்​பட்​டன.

இப்பகுதிகளில் நீர் மற்​றும் நிலப்​பரப்​புக்கு கீழ் புதையல் மற்​றும் கடல்​வாழ் உயி​ரினங்​களின் படிமங்​கள் இருப்​ப​தால் இந்​திய விலங்​கியல் மற்​றும் புவி​யியல் துறை ஆய்வு நடத்த வேண்​டும்என கோரிக்கை எழுந்தது.

இந்​நிலை​யில், மத்​திய விலங்​கியல் ஆய்வு மையத்​தைச் சேர்ந்த விஞ்​ஞானிகள் கடந்த ஜனவரி மாதம் பனையூர் பகு​தி​யில் சுமார் 2 கி.மீ. தூரம் ஆய்வு செய்​தனர். அப்​போது சிறியஅளவி​லான சிப்​பிகள் உள்​ளிட்​ட​வற்றை சேகரித்து ஆய்​வுக்கு கொண்டு சென்​றனர்.

இதுதொடர்​பாக இந்​திய விலங்​கியல் ஆய்வு மையம் தற்​போது அறிக்கை வெளி​யிட்​டுள்​ளது. அதில், பனையூர் கடற்​கரை பகு​தி​யில் கண்​டெடுக்​கப்​பட்ட கடல்​சார் புதைபடிமங்​கள் 8 ஆயிரம் முதல் 12ஆயிரம் ஆண்​டு​களுக்கு முற்​பட்​டவை எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தூத்​துக்​குடியைச் சேர்ந்த வரலாறு மற்​றும் தொல்​லியல் ஆர்​வலர் பெ.​ராஜேஷ் செல்​வரதி கூறிய​தாவது: பனையூரில் கண்​டெடுக்​கப்​பட்ட சிப்​பிகள் (Magallana) மற்​றும் கிளிஞ்​சல்​கள் (Meretrix casta) போன்ற சிற்​றினங்​கள், அலைகளின் வேகம் குறை​வாக உள்ள அமை​தி​யான கடல் அல்​லது முகத்​து​வாரச் சூழலில் மட்​டுமே செழிக்​க கூடிய​வை.

பனையூரில் தற்​போதைய கடற்​கரையி​லிருந்து 5 முதல் 7 கி.மீ. உள்​நோக்கி இந்த புதை படிமங்​கள் கண்​டறியப்​பட்​டிருப்​பது, ஹோலோ​சீன் காலத்தில் கடல் மட்​டம் உயர்ந்து ஆழமான வளை​கு​டாக்​களை உரு​வாக்கி இருந்​ததை நிரூபிக்​கிறது.

இந்த படுக்​கை​களில் சிப்​பிகள், கிளிஞ்​சல்​கள் போன்ற 100-க்​கும் மேற்​பட்ட மாதிரி​கள் ஆவணப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. பனையூர் புதைபடிவப் படுக்​கைகள் வெறும் ஓடு​களின் தொகுப்பு மட்​டுமல்ல. அவை, சுமார் 8,000 முதல் 12,000 ஆண்​டு​களுக்கு முற்​பட்ட ஹோலோ​சீன் ஊழிக்​காலத்​தின் உயர்தர உயி​ரியல் ஆவணம் ஆகும் என விலங்​கியல் ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது பாண்​டிய வம்​சத்​தின் வரலாறு மற்​றும் மறைந்த நகரங்​களான கபாடபுரம், தென்​மதுரையை ஆய்வு செய்​பவர்​களுக்​கு, இலக்​கி​யங்​களில் கூறப்​படும் கடல்​-கோள் நிகழ்​வு​களை உறு​திப்​படுத்​தும் புவி​யியல் சான்​றாக அமை​கிறது. கடந்த பல ஆயிரம் ஆண்​டு​களாக இந்த உயி​ரினங்​களின் உருவ அமைப்​பில் மாற்​றங்​கள் ஏற்​பட​வில்லை என்​பதை இந்த ஆய்வு வெளிப்​படுத்​துகிறது.

இது மன்​னார் வளை​குடா உலகின் மிக நிலை​யான கடல் சூழலமைப்​பு​களில் ஒன்​றாக இருந்​ததைக் காட்​டு​கிறது. எனவே, கீழக்​கரை முதல் திருச்​செந்​தூர் வரையி​லான இந்த வரலாற்று மற்​றும் அறி​வியல் சிறப்​புமிக்க கடற்​கரை மண்​டலத்தை ‘பண்​டைய கடல்​சார் பாரம்​பரிய மண்​டல​மாக’ அறிவிக்க வேண்​டும்.

இந்த பாது​காக்​கப்​பட்ட வளை​கு​டாக்​களின் புவி​யியல் வரலாறு மற்​றும் இந்​தி​யா​வின் கடல்​சார் வளங்​களில் அவற்​றின் பங்கை விளக்​கும் வகை​யில் தூத்​துக்​குடி​யில் தேசிய புவி பூங்கா அமைக்​க வேண்​டும்​.