惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
量子位
大猫的无限游戏
大猫的无限游戏
Hugging Face - Blog
Hugging Face - Blog
S
SegmentFault 最新的问题
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
Google DeepMind News
Google DeepMind News
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog RSS Feed
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog
博客园 - 聂微东
The GitHub Blog
The GitHub Blog
Recent Announcements
Recent Announcements
Y
Y Combinator Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
雷峰网
雷峰网
Jina AI
Jina AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு உச்ச நீதிமன்றம் நி...
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயான் சர்மா, வெளிநாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்திருப்பதாகவும், வெளிநாடுகளில் அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு முன்ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பேசிய பவன் கேரா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயான் சர்மா, வெளிநாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்திருப்பதாகவும், வெளிநாடுகளில் அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, அசாம் அரசு தலைமை வழக்கறிஞரின் (Advocate General) புகாரின் பேரில், மாநில போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கல், கடந்த ஏப்ரல் 24ம் தேதி பவன் கேராவுக்கு எதிராக கவுகாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பவன் கேரா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, பவன் கேராவுக்குச் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. “குற்றப்பிரிவு காவல் நிலைய வழக்கு எண் 04/2026-இன் கீழ் மேல்முறையீட்டாளர் (பவன் கேரா) கைது செய்யப்படும் பட்சத்தில், அவர் முன்ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரி விதிக்கும் நியாயமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அவர் கட்டுப்பட வேண்டும்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேவைப்படும்போதும் தகவல் தெரிவிக்கப்படும்போதும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். வழக்கின் விசாரணை அல்லது நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருக்கும் காலத்தில், அவர் எந்தவொரு சாட்சியத்தையும் பாதிக்கவோ அல்லது சிதைக்கவோ கூடாது. உரிய நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது. வழக்கின் விசாரணையின்போது கூடுதல் நிபந்தனைகளை விதிப்பது பொருத்தமென விசாரணை நீதிமன்றம் கருதினால், அவ்வாறு செய்வதற்கு அதற்கு முழு அதிகாரம் (discretion) உண்டு” என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.