惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Vercel News
Vercel News
B
Blog
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
IT之家
IT之家
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
Tailwind CSS Blog
博客园_首页
C
Check Point Blog
博客园 - 【当耐特】
美团技术团队
Last Week in AI
Last Week in AI
A
About on SuperTechFans
雷峰网
雷峰网
MongoDB | Blog
MongoDB | Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
M
MIT News - Artificial intelligence
Martin Fowler
Martin Fowler
J
Java Code Geeks
B
Blog RSS Feed
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
G
Google Developers Blog
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
"நீட் தேர்வு ரத்து குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிற...
டி.ஜி.ரகுபதி · 2026-06-21 · via hindutamil

கோவை அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவி்ல் அமைச்சர்கள் அருண்ராஜ், சம்பத்குமார், விக்னேஷ் | படம்: ஜெ.மனோகரன்

Updated on: 

கோவை: நீட் தேர்வு ரத்து குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 20) நடைபெற்றது. இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 100 பேரும், கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 144 பேரும் பட்டம் பெற்றனர். தனித்தனியாக மேற்கண்ட மருத்துவமனைகளில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார், மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் கே.விக்னேஷ் ஆகியோரும் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினா். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், எம்.எல்.ஏக்கள் கனிமொழி சந்தோஷ், ஸ்ரீகிரிபிரசாத், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி, டீன் கீதாஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் எய்ம்ஸ் இடம் தேர்வு குறித்து ஆலோசனை செய்து உள்ளோம். எய்ம்ஸ் மருத்துவமனை இடம் தேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். மதுரை எய்ம்ஸ் என்ன நிலையில் உள்ளது என ஆய்வு செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கழிவறைகள், தூய்மையான வளாகம் மற்றும் நோயாளிகள் காத்திருப்பு நேரம் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் தரத்தில் மருத்துவ சேவை கொடுக்க வேண்டும் என்பது தான் முதல்வரின் நோக்கம்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக இரண்டு மாணவர்களை இழந்து இருப்பது வருத்தம் அளிக்க கூடிய விஷயம். நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது தான் தவெக நிலைப்பாடு. நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. கிராமப்புற, ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வு வேண்டாம் என்பது எங்களது நிலையான முடிவு. கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும். அதை ஆளுநர் உரையில் கொண்டு வந்து இருக்கிறோம். மாணவர்கள் நீட் தேர்வில் தவறான முடிவு எடுக்க கூடாது.

நீட் மறுதேர்வு காரணமாக மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருப்பது உண்மை தான். இதற்காக தான் அரசு உதவி எண்கள் வெளியிட்டு இருக்கிறது. இதனை மாணவர்கள் அணுக வேண்டும். தேர்வு மட்டும் வாழ்க்கை இல்லை. நடைபெற உள்ள நீட் தேர்வை சிறப்பாக எழுதுங்கள். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் வாழ்க்கை முடிந்து விடாது. நீட் தேர்வு ரத்து குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். தவிர சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வோம். மருத்துவமனையில் கட்டிடங்கள் பல பராமரிக்காமல் இருக்கிறது. இதனை சரிசெய்ய பொதுப்பணித்துறையுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.