




















Updated on
:
1 min read
சென்னை: ‘ஒரு வாக்குதானே’ என எண்ணாமல், ‘ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது’ என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இரவு 8.50 மணி நிலவரப்படி சுமார் 85.05 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தேசம் சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெறும் தமிழத்தில் முதல் முறையாக 85 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த சூழலில் இது குறித்து முதல்வர் ஸ்டாலின், எக்ஸ் சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
“எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல். 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர். ‘ஒரு வாக்குதானே’ என எண்ணாமல், ‘ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது’ என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம் ஒன்றாக!” என்று தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。