





















பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக இயக்க இருக்கிறார். அதற்கான உரிமையை வாங்கியுள்ள அவர், இப்படத்தை 3 பாகமாக உருவாக்க இருப்பதாக முந்தைய பேட்டிகளில் கூறியிருந்தார்.
தற்போதைய, தனது கனவு படம் என்றும் அதை அவர் தெரிவித்திருந்தார். அந்தப் படத்தின் ‘பிரி புரொடக் ஷன்’ பணிகளுக்கு ஒரு வருடம் ஆகும் என்று கூறப்படுகிறது. அதற்கான வேலைகளை அவரும் அவருடைய டீமும் தொடங்கியுள்ளனர். அதற்கு முன் இளம் ஹீரோ நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
வழக்கமான அவருடைய பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆக் ஷன் த்ரில்லர் கதையை அவர் இயக்க இருக்கிறார். இதற்காக 2 இளம் ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் படத்தை விரைவாக முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。