惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
Last Week in AI
Last Week in AI
T
Tailwind CSS Blog
WordPress大学
WordPress大学
B
Blog RSS Feed
T
The Blog of Author Tim Ferriss
F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky
C
Check Point Blog
P
Proofpoint News Feed
H
Help Net Security
月光博客
月光博客
博客园_首页
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 三生石上(FineUI控件)
Martin Fowler
Martin Fowler
Recent Announcements
Recent Announcements
人人都是产品经理
人人都是产品经理
U
Unit 42
美团技术团队
I
InfoQ
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘சிங்கப்பெண்’ சிறப்பு படைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அற...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘சிங்​கப்​பெண்’ சிறப்பு படையை பொது​மக்​கள் தொடர்பு கொள்ள, கட்​ட​ணமில்லா தொலைபேசி எண்​ணை, டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் வெளி​யிட்​டுள்​ளார்.

பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றங்​களை தடுக்​கும் வகை​யிலும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உடனடி காவல் உதவி கிடைக்​கும் வகை​யிலும், தமிழக காவல்துறை​யின் சார்​பில், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை உரு​வாக்​கப்​பட்டு செயல்​பட்டு வரு​கிறது. பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் அதி​கம் பாதிக்​கப்​படக் கூடிய பகு​தி​களில் கண்​காணிப்பு பணியை தீவிரப்​படுத்​துதல், அவசர சூழ்​நிலைகளில் விரைந்து சென்று பாது​காப்பு வழங்​குதல், குற்​றங்​களை தடுக்​கும் வகை​யில் நடவடிக்கை மேற்​கொள்​ளுதல் ஆகிய​வற்றை முக்​கிய நோக்​க​மாக கொண்​டு, இப்​படை தமிழகம் முழு​வதும் செயல்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், சிங்​கப் பெண் சிறப்பு அதிரடிப்​படை​யின் செயல்​பாடு​களை மேலும் வலுப்​படுத்​தும் வகை​யில், அதன் பிரத்​யேக உதவி எண்​ணாக ‘1091’ அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த உதவி எண், மாநில அவசர கால உதவி எண்​ணான ‘112’ உடன் ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம், பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் எதிர்​கொள்​ளும் தொந்​தர​வு, குடும்ப வன்​முறை, பாலியல் தொந்​தர​வு, மிரட்​டல், பின்​தொடர்​தல் உள்​ளிட்ட பிரச்​சினை​கள் குறித்து உடனடி​யாக தகவல் தெரிவிக்க முடி​யும்.

1091 எண்​ணுக்கு வரும் அழைப்​பு​களை 24 மணி நேர​மும் செயல்​படும் மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறை​யில் உள்ள பயிற்சி பெற்ற காவலர்​கள் கண்​காணிப்​பார்​கள். புகார்​கள் பெறப்​பட்​ட​வுடன், சம்​பந்​தப்​பட்ட மாவட்ட காவல் கட்​டுப்​பாட்டு அறைக்​கும், அரு​கில் உள்ள சிங்​கப் பெண் அதிரடிப்​படை அல்​லது ரோந்து குழு​வினருக்​கும் தகவல் அனுப்​பப்​பட்​டு, சம்பவ இடத்​துக்கு காவலர்​கள் விரைந்து செல்​வதற்​கான நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு பாது​காப்பு வழங்​கு​வதுடன், தேவை​யான சட்ட நடவடிக்​கைகள் உடனடி​யாக மேற்​கொள்​ளப்​படு​வதை காவல்​துறை தொடர்ந்து கண்​காணிக்​கும். பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் பாது​காப்​பான சூழலில் வாழும் வகை​யில், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை மற்​றும் 1091 உதவி எண் மூலம் காவல்​துறை தனது பணி​களை தீவிரப்​படுத்தி வரு​கிறது. அவசர உதவி தேவைப்​படும் நேரங்​களில் தயக்​கமின்றி 1091 எண்ணை தொடர்பு கொள்​ளு​மாறு, பொது​மக்​களுக்கு டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் மற்​றும் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை ஐஜி பவானீஸ்​வரி அறி​வுறுத்​தி உள்​ளனர்​.