

























முன்னதாக, இந்திய நேரப்படி இன்று காலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தார். “ஈரான் உடனான போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறது. அமைதி ஒப்பந்தம் சார்ந்து ஒருங்கிணைந்த முன்மொழிவை ஈரான் முன்வைக்கும் வரையில் இந்த போர் நிறுத்தம் தொடரும். அதே நேரத்தில் ஈரான் துறைமுகங்கள் முற்றுகையிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் பணியை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நான் கூறியுள்ளேன்,” என தனது அறிவிப்பில் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்தம் இன்றுடன் (ஏப்.22) நிறைவடைகிறது. இந்த சூழலில் ட்ரம்ப் இதனை நீட்டித்துள்ளார்.
ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல் ஆகும். அதை அமெரிக்கா விலக்கிக் கொண்டால் தங்கள் தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என ஐ.நாவுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。