惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
博客园 - 【当耐特】
月光博客
月光博客
Vercel News
Vercel News
D
Docker
I
InfoQ
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 叶小钗
MongoDB | Blog
MongoDB | Blog
GbyAI
GbyAI
有赞技术团队
有赞技术团队
雷峰网
雷峰网
博客园 - 聂微东
小众软件
小众软件
Y
Y Combinator Blog
腾讯CDC
L
LangChain Blog
The GitHub Blog
The GitHub Blog
宝玉的分享
宝玉的分享
Stack Overflow Blog
Stack Overflow Blog
大猫的无限游戏
大猫的无限游戏
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆம்பூர் தொகுதியில் அமர்க்கள வெற்றி யாருக்கு?
2026-04-19 · via hindutamil

Updated on

2 min read

ஆம்பூர்: தொழில் வளம் மிக்க ஆம்பூர் தொகுதி ‘டாலர் சிட்டி’ என அழைக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு அன்னிய செலவாணியை அதிகமாக ஈட்டி தரும் தொகுதியாக ஆம்பூர் இன்றளவும் விளங்கு கிறது. தோல் தொழில் மட்டுமின்றி அசைவ மற்றும் சைவ உணவு தயாரிப்பிலும் ஆம்பூர் இந்திய அளவில் பிரசித்தி பெற்றது.

கடந்த 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆம்பூர் தொகுதி இடையில் அதாவது 1971-ம் ஆண்டுக்கு பிறகு தொகுதி நீக்கம் செய்யப்பட்டது. பிறகு 2008-ல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது ஆம்பூர் தொகுதி மீண்டும் உருவாக்கப்பட்டு அதன் பிறகு 2011-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது.

தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தோல் பொருட்கள் தயாரிப்பு நிறைந்த பகுதியாக ஆம்பூர் உள்ளது. தொழில் வளாகத்தில் முன்னணி நகரமாக ஆம்பூர் திகழ்ந்தாலும், பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இன்று வரை இருப்பது தான் நிதர்சனமான உண்மை.

வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம், கிராமப்புற பகுதிகள் நிறைந் துள்ளன. நகர் பகுதியை காட்டிலும் கிராமப்புற பகுதிகளில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.

ஆம்பூரில் தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் உலக அளவில் ஆம்பூர் பிரசித்தி பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், தோல் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளால் தொழில் வளத்தில் ஆம்பூர் சிறந்து விளங்கினாலும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் பாலாற்றில் அடிக்கடி கலக்கப்படுவதால் பாலாறு முழுவதும் மாசடைந்து காணப்படுவதும் தொகுதி மக்களுக்கு பெருங்குறையாகவே உள்ளது.

இது மட்டுமின்றி பாலாற்றில் மணல் கடத்தல் தடையில்லாமல் நடைபெறுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஆம்பூர் தொகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து காணப்படுவதும், தொகுதி மக்களிடம் பெரும் துயரத்தை ஏற்படுத்திஉள்ளது.

இத்தொகுதியில் முதலியார்கள், வன்னியர்கள், கிறிஸ்தவர்கள், நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக இருந்தாலும், ஆதி திராவிடர்கள் மற்றும் சிறுபான்மையினர் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக திகழ்கின்றனர்.

ஆம்பூர் தொகுதி உருவாக்கப்பட்ட காலத்தில் காங்கிரஸ் வசம் இருந்த ஆம்பூர் காலப்போக்கில் திமுக கோட்டையாக மாறியது. பிற்காலத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் இத்தொகுதியில் அதிக முறை வெற்றி வாகை சூடியுள்ளனர்.

இந்த தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் அ.செ.வில்வநாதன் 3-வது முறையாக போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பொறியாளர் வெங்கடேசனும், தவெக சார்பில் இம்தியாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் அப்ஷியா நஸ்ரின் உட்பட மொத்தம் 16 பேர் களத்தில் உள்ளனர்.

16 பேர் போட்டியிட்டாலும் தொகுதியை கைப்பற்றுவதில் திமுக – அதிமுக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள திமுக வேட்பாளர் அ.செ.வில்வநாதன் மீது சொந்த கட்சியினரே அதிருப்தியில் இருப்பதால் அதிமுக தொகுதியை இந்த முறை எளிதாக கைப்பற்றிவிடலாம் என்ற கணக்கில் அதிமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

அதேநேரத்தில், அதிமுக கூட்டணி கட்சி சார்பில் பழனிசாமி மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்துள்ள நிலையில், திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, பிரேமலதா என அரசியல் கட்சியின் தலைவர்கள் திமுக வேட்பாளருக்காக ஆம்பூரில் பிரச்சாரம் செய்துள்ளதால் 3-வது முறை தொகுதியை திமுகவே கைப்பற்றும் என அக்கட்சியினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

தவெக மற்றும் நாதக கட்சியினர் தங்களது வழக்கமான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தாலும் தவெக வேட்பாளர் பிரச்சாரம் கொஞ்சம் மந்தமாகவே உள்ளதாக தொகுதி மக்களே கூறுகின்றனர்.

இருப்பினும், தொகுதியை தக்க வைக்க திமுகவும், தொகுதியை மீட்டெடுக்க அதிமுக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. மே 4-ம் தேதி ஆம்பூர் தொகுதி யார்? பக்கம் சென்றுள்ளது என்பது தெரிந்துவிடும்.

முக்கிய கோரிக்கைகள்

* ஆம்பூர் நகர் பகுதியில் அரசு மேல் நிலை பள்ளி அமைக்க வேண்டும்

* நாயக்கனேரி மலை கிராமத்துக்கு பேருந்து வசதியை அதிகரிக்க வேண் டும்.

* பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும், அரசு பாலிடெக்னிக், ஐடிஐ அமைக்க வேண்டும்.

* ஆம்பூர் நகர் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும். ரெட்டித்தோப்பு மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

* தோல் கழிவுநீர் பாலாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

இதுவரை வென்றவர்கள்

  • 1957 - வி. கே. கிருஷ்ணமூர்த்தி - (காங்கிரஸ்)

  • 1962 - பி. ராஜகோபால் - (காங்கிரஸ்)

  • 1967 - எம். பன்னீர்செல்வம் - (திமுக)

  • 1971 - எம். பன்னீர்செல்வம் - (திமுக) (தொகுதி நீக்கம்)

  • 2011 - ஏ. அஸ்லாம் பாஷா - (ம.நே.ம.கட்சி)

  • 2016 - ஆர். பாலசுப்பிரமணி - (அதிமுக)

  • 2019 - அ.செ. வில்வநாதன் - (திமுக)

  • 2021 - அ.செ. வில்வநாதன் - (திமுக)

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,04,331

  • பெண் - 1,10,097

  • மூன்றாம் பாலினத்தவர் - 41

  • மொத்த வாக்காளர்கள் - 2,14,469