



















Updated on
:
1 min read
சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் மித்ரன் இயக்கும் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்தை இயக்கி முடித்துள்ளார் மித்ரன். அடுத்ததாக இந்திப் படம் ஒன்றை இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனை இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
முழுக்க காட்டுகள் நடக்கும் கதையை முன்வைத்து இதன் திரைக்கதையை அமைத்துள்ளார் மித்ரன். மேலும், இதில் புராணக் கதையின் பின்புலமும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதனை முடித்துவிட்டு தமிழரசன் பச்சமுத்து, மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரது படங்களில் நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு சஞ்சய் லீலா பன்சாலி படத்தை தொடங்குவாரா அல்லது அதற்கு முன்னதாக திட்டமிட்டுகிறாரா என்பது விரைவில் தெரியவரும்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。