


























Updated on
:
1 min read
பிரபல அமெரிக்க பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருடைய பாடல்களும் நடனமும் இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
13 கிராமி விருதுகளையும், இசைக்கான பல்வேறு விருதுகளையும் வென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இவர் கடந்த 2009-ம் ஆண்டு மரணமடைந்தார். அவருடைய வாழ்க்கைக் கதை இப்போது சினிமாவாகி இருக்கிறது.
‘மைக்கேல்’ என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில், மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெமைன் ஜாக்சனின் மகன் ஜாஃபர் ஜாக்சன், மைக்கேல் ஜாக்சனாக நடித்துள்ளார். அன்டோயின் ஃபுகுவா இயக்கியுள்ள இப்படத்தை ஆஸ்கர் விருது பெற்ற ‘பொஹிமியன் ராப்சோடி’ படத்தைத் தயாரித்த கிரஹாம் கிங் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படம் கடந்த 24ம் தேதி வெளியானது. இந்நிலையில், ‘மைக்கேல்’ படம் இதுவரை உலகளவில் ரூ. 2,200 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。