惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
宝玉的分享
宝玉的分享
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
Tailwind CSS Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
博客园_首页
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 叶小钗
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
量子位
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
美团技术团队
小众软件
小众软件
Jina AI
Jina AI
S
SegmentFault 最新的问题
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தனி வீடுகளை நோட்டமிட்டு நகைளை திருடும் கும்பல்: அச்சத்தில...
என்.சன்னாசி · 2026-05-31 · via hindutamil

பொதும்பு வானவில் நகரில் 100 பவுன், அமெரிக்க டாலர்கள் திருட்டு நடந்த ஐடி ஊழியர் வீடு.

Updated on: 

மதுரை புறநகர் பகுதியில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நகைகளை திருடிச் செல்லும் கும்பல்களை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மதுரை நகர் எல்லையின் விரிவாக்கப் பகுதிகளில் ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாகி உள்ளன. நகருக்கு தண்ணீர் பிரச்சினை, நெரிசலை தவிர்க்க பலர் புறநகர் பகுதி களில் வீடுகளை கட்டி குடியேறுகின்றனர். சமீப காலமமாக புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் கொள்ளை கும்பல் வீடு புகுந்து திருடிச் செல்வது அதிகரித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அலங்காநல்லூர் காவல் சரகம் பாசிங்காபுரம் பகுதியில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவரின் பூட்டியிருந்த வீட்டில் 200 பவுன் நகைகள் திருடப்பட்டன. இவ்வழக்கில் கொள்ளையர்கள் இதுவரை பிடிபடவில்லை. வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க்கையும் கொள்ளை கும்பல் திருடிச் சென்றதால் துப்பு துலக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், பொதும்பு அருகே வானவில் நகரில் அமெரிக்காவில் பணிபுரியும் ஐடி ஊழியர் சதீஷ் (50) புதிதாக வீடு கட்டி குடியேறினார். வீட்டில் அவரது மனைவி குடும்பத்தார் இருந்தனர். அவர்கள் கடந்த 25-ம் தேதி கொடைக்கானல் சென்றுவிட்டு நேற்று முன்தினம் திரும்பியபோது, கதவை உடைத்து 100 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் மதிப்பு 500 அமெரிக்க டாலர்கள் திருடுபோனது தெரிந்தது. காரில் வந்த கொள்ளைக் கும்பல் வீட்டில் பொருத்தி யிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி விட்டு அதன் ஹார்டு டிஸ்க்கையும் திருடிச் சென்றது.

இதனால் வீட்டுக்கு அருகே பிரதான சாலையில் உள்ள கேமராக்களை வைத்து அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வக்குமார் தலை மையிலான தனிப்படை போலீஸார் திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புறநகரில் விரிவாக்கப் பகுதி களில் நடக்கும் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களால் குடி யிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ’பெரும்பாலும் புறநகர் பகுதியில் கிராமத்துக்குள், வீடுகள் நெருக்கமாக இருக்கும் குடியிருப்புகளை கொள்ளையர் தவிர்க்கின்றனர். விரிவாக்கப் பகுதி, வயல் வெளிகளில் தனியாக இருக்கும் வீடுகள், பூட்டிக் கிடக்கும் வீடு களை பகலில் நோட்டமிட்டு இரவில் திருடுகின்றனர்.

பூட்டிய வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபடும் திருடர்களின் பட்டியலை சேகரித்து விசாரிக்கிறோம். சதீஷ் வீட்டில் திருடிய கும்பலுக்கும், கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு பாசிங்காபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் வீட்டில் திருடிய கும்பலுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்.

இருப்பினும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வீடு கட்டி குடியிருப்போர், வீடுகளில் அதிக நகை, பணம் வைப்பதை தவிர்க்க வேண்டும். வெளியூர் செல்வோர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால் வீடுகளை கண்காணிப்போம்' என்றனர்.