




















பெண்ணின் சடலம் கிடந்த கிணறு அருகே மோப்பநாய் மூலம் சோதனை நடத்திய போலீஸார்.
Updated on:
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் சிறுமுகை அருகேயுள்ள கோபி ராசிபுரம் பகுதியில், தனியாருக்கு சொந்த மான தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது.
தகவலின் பேரில், சிறுமுகை போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சென்று கிணற்றில் கயிறு கட்டி இறங்கினர்.
கிணற்றில் மிதந்த சாக்குமூட்டையை மேலே தூக்கிவந்து பிரித்து பார்த்த போது, அதில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது. சடலத்துடன் ஒரு பெரிய கல்லும் கட்டப்பட்டு இருந்தது.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சடலமாக கிடந்த பெண், வட மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும், சுமார் 20 முதல் 25 வயதுக்குள் இருக்கலாம், திருமணமான பெண்ணாக இருக்கலாம் எனவும் தெரியவந்தது.
பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியவில்லை. 5 நாட்களுக்கு முன்னர் தான் பெண்ணின் சடலம் வீசப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. கிணற்றுக்கு அருகே சில துணிகள் கிடந்தன. அவற்றையும் போலீஸார் கைப்பற்றினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை துரிதப்படுத்தினார். பெண் மாயம் தொடர்பாக ஏதா
வது புகார்கள் வந்துள்ளனவா?, தொழிற்சாலைகள், மில்களில் பணியாற்றிய பெண் யாராவது மாயமாகியுள்ளனரா, கொலை செய்த நபர்கள் யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。