惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
A
About on SuperTechFans
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
N
Netflix TechBlog - Medium
Microsoft Security Blog
Microsoft Security Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 聂微东
博客园 - Franky
D
Docker
Martin Fowler
Martin Fowler
Engineering at Meta
Engineering at Meta
The Cloudflare Blog
人人都是产品经理
人人都是产品经理
Last Week in AI
Last Week in AI
U
Unit 42
F
Fortinet All Blogs
H
Help Net Security
Blog — PlanetScale
Blog — PlanetScale
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
罗磊的独立博客
P
Proofpoint News Feed
月光博客
月光博客
G
Google Developers Blog

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை...
செய்திப்பிரிவு · 2026-04-12 · via hindutamil

Updated on: 

செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் நகரக் கழக செயலாளர் டி.சீனிவாசன் தலைமையில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு நடிகை கவுதமி நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சீனிவாசன், கணிதா சம்பத் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கவுதமி பேசியதாவது: விலைவாசி உயர்வு ஸ்டாலின் அரசின் மிகப்பெரிய சாதனை. பச்சை குழந்தைகள் முதல் வயதான முதியவர் வரை பாதுகாப்பாக இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.

போக்சோ வழக்குகள் மட்டும் 6,000-க்கும் மேற்பட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு முறை யான வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை. தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். சாலை வசதிகள் பழனிசாமி காலத்தில் போடப்பட்டது போல் இல்லாமல் தற்போது மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சிறு மழைக்குக் கூட தாக்குப் பிடிக்காத அளவிற்கு சாலைகள் உள்ளது. இளம் தலைமுறையை சீரழிக்கும் விதமாக கஞ்சா போதை விற்பனை தமிழகத்தில் மலிவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது.

திமுகவில் திருட்டுத் தனத்திற்கு முற்றுப் புள்ளியே இல்லாத அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. மக்களின் ரத்தத்தை உறிஞ்சி சாப்பிடும் அளவிற்கு ஊழல் உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப் படவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்து பழனிசாமி முதல்வர் ஆனவுடன் ஸ்டாலின் அரசால் மக்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு நியாயம் கிடைக்கும். மக்கள் அனைவரும் ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்பி, பழனிசாமி முதல்வராக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.