
















Updated on
:
1 min read
திண்டுக்கல்: “மே 4-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் விசில் புரட்சிதான் நடைபெற இருக்கிறது” என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஏப்.28) மாலை தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நாளை தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் (விஜய்) திருச்செந்தூருக்கு சென்று முருகனை வழிபட்டு சென்றிருக்கிறார்.
இது ஒரு சிறந்த நாள். அவருடைய தொலைநோக்கு சிந்தனை, நாளை தமிழகத்தை ஆளுவது, மக்களால் ஒரு மனதாக அவரை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணங்களாக இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை உலகளவில் முதலில் பசுமை புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி, சமூகப் புரட்சி தான் நடந்திருக்கிறது. ஆனால் வரும் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் விசில் புரட்சிதான் நடைபெற இருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெற்றி பெறும்” என்று அவர் தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。