惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
V
V2EX
WordPress大学
WordPress大学
U
Unit 42
I
InfoQ
A
About on SuperTechFans
宝玉的分享
宝玉的分享
J
Java Code Geeks
博客园 - 司徒正美
爱范儿
爱范儿
Engineering at Meta
Engineering at Meta
G
Google Developers Blog
人人都是产品经理
人人都是产品经理
小众软件
小众软件
Microsoft Security Blog
Microsoft Security Blog
L
LangChain Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
aimingoo的专栏
aimingoo的专栏
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI
腾讯CDC
Recent Announcements
Recent Announcements

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தங்கம் மீதான சுங்க வரியை 6%-ல் இருந்து 15% ஆக உயர்த்தியது...
2026-05-13 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதனால், ஆபரணத் தங்கம் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என்பதால் தங்கம் வாங்குவதை மக்கள் தவிர்ப்பதும், தள்ளிப் போடுவதும் நடக்கும் எனத் தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘நாட்டு மக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டு காலம் தவிர்க்க வேண்டும்’ என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருருந்த நிலையில், தங்கத்தின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

உலக அளவில் தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இதோடு வெள்ளியையும் அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்திய தேசம் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகளவில் தங்கம் வாங்கி வருவதாக தகவல். உலகளாவிய தங்கத்தில் சுமார் 11 சதவீதம் இந்திய குடும்பங்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தங்கம் சார்ந்த கோல்டு இடிஎஃப்-பில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில்தான் தங்கத்தின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்கத்தின் மீதான சுங்க வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதில் 10 சதவீதம் அடிப்படை சுங்க வரி என்றும், 5 சதவீதம் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கூடுதல் வரி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தங்கம் உள்ளிட்ட உலோக இறக்குமதியை குறைப்பது, வர்த்தகப் பற்றாக்குறையை மட்டுப்படுத்துவதுதான் அரசின் திட்டம் என வர்த்தக துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2024 ஜூலையில் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருந்தது. தற்போது அதை 15 சதவீதமாக அரசு உயர்த்தி உள்ளது. இதுமட்டுமல்லாது தங்கத்தின் மீது ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.