惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
Tailwind CSS Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
博客园 - 聂微东
博客园 - 司徒正美
量子位
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
G
Google Developers Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
罗磊的独立博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Y
Y Combinator Blog
S
SegmentFault 最新的问题
T
The Blog of Author Tim Ferriss
P
Proofpoint News Feed
Google DeepMind News
Google DeepMind News
Blog — PlanetScale
Blog — PlanetScale
有赞技术团队
有赞技术团队
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சகோதரியின் எலும்புக் கூடுடன் வந்த பழங்குடியின நபருக்கு ப...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

புவனேசுவரம்: ஒடிசா மாநிலம் கேந்​துஜார் மாவட்​டம் தியா​னாலி கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஜீத்து முண்​டா. இவரது சகோ​தரி கக்ரா முண்டா இரண்டு மாதங்​களுக்கு முன்பு கால​மா​னார். மல்​லி​பாசி பகு​தி​யில் உள்ள ஒடிசா கிராமின் வங்​கிக் கிளை​யில் கக்ரா கணக்கு வைத்​திருந்​தார். அதில் இருந்த ரூ.19,400-ஐ எடுப்​ப​தற்​காக ஜீத்து முண்டா வங்​கிக்​குச் சென்​றுள்​ளார்.

கல்​வியறிவு இல்​லாத பழங்​குடி​யின​ரான ஜீத்து முண்​டா​விடம், அவரது சகோ​தரி​யின் இறப்​புச் சான்​றிதழ் அல்​லது வாரிசுச் சான்றிதழ் இல்​லை. இதனால், கணக்கு வைத்​திருப்​பவர் நேரில் வர வேண்​டும் அல்​லது உரிய ஆவணங்​களைச் சமர்ப்​பிக்க வேண்டும் என்று வங்கி மேலா​ளர் கூறி​யுள்​ளார்.

சட்ட நடை​முறை​களைப் புரிந்து கொள்ள முடி​யாத நிலை​யில் விரக்​தி​யடைந்த ஜீத்து முண்​டா, கடந்த திங்​கள்​கிழமை மயானத்திற்​குச் சென்று தனது சகோ​தரி​யின் உடலைத் தோண்டி எடுத்​து, எலும்​புக்​கூடை துணி​யால் சுற்றி தோளில் சுமந்​த​படி 3 கிலோ மீட்​டர் தூரம் நடந்து வங்​கிக்கு வந்​தார்.

இந்​தக் காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி நாடு முழுவதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. இது வங்​கி​யின் மனிதாபி​மானமற்ற செயல் எனப் பலரும் கண்​டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஒடிசா முதல்​வர் மோகன் சரண் மாஜி​யும் விசா​ரணைக்கு உத்​தர​விட்​டார்.

இந்நிலை​யில் ஒடிசா கிராமின் வங்கி தனது எக்ஸ் தளத்​தில், ‘‘இறந்​தவர் நேரில் வர வேண்​டும் என்று வங்கி அதி​காரி​கள் தெரிவித்​தாகக் கூறப்​படும் தகவல் தவறானது. சட்​டப்​படி​யான ஆவணங்​கள் இல்​லாத​தால் பணத்தை வழங்க முடிய​வில்​லை. அந்த நபர் மது​போதை​யில் இருந்​த​தால் நடை​முறை​களை விளக்கிக் கூறி​யும் அவர் ஏற்​க​வில்​லை. தற்​போது அரசு அதிகாரிகள் வழங்​கிய வாரிசுச் சான்​றிதழின் அடிப்​படை​யில், ரூ.19,402 தொகை 3 வாரிசு​தா​ரர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது’’ என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்து உள்​ளூர் மக்​கள் கூறுகை​யில், ‘‘வங்கி அதி​காரி​கள் கிராம பஞ்​சா​யத்​துத் தலை​வரிடம் விசா​ரித்​தாலே உண்மை தெரிந்​திருக்​கும். ஆவணங்​களுக்​காக ஒரு ஏழை மனிதரை இவ்வளவு தூரம் அலைக்​கழித்​தது வேதனைக்​குரியது’’ என்றனர்.

முன்​ன​தாக, இந்த விவ​காரத்​தில், காவல்​ துறை​யினரும் உள்​ளூர் அதி​காரி​களும் தலை​யிட்டு முண்​டாவை சமா​தானப்​படுத்​தினர், மேலும் அவரது கோரிக்கை நிறைவேற்​றப்​படும் என்​றும் அவருக்கு உறு​தி​யளித்​தனர். அதி​காரி​கள் அவருக்கு உதவி​யாக 30,000 ரூபாயை​யும் வழங்க முன்​வந்​தனர். மேலும், அரசு அதிகாரிகள் இறப்​புச் சான்​றிதழை​யும் சட்​டப்​பூர்​வ வாரிசு ஆவணங்​களை​யும்​ ஜீத்​து முண்​டா​விடம்​ வழங்​கினர்​.