


























ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன், ஷாகித் கபூர் நடித்துள்ள ‘காக்டெய்ல் 2’ என்ற இந்தி திரைப்படம், ஜூன் 19ம் தேதி வெளியாகிறது. ஹோமி அடஜானியா இயக்கியுள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி புனே-வில் உள்ள வணிகவளாகம் ஒன்றில் நடைபெற்றது. இதற்காக ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன், ஷாகித் கபூர் ஆகியோர் அங்கு சென்றனர்.
இவர்களைக் கண்டதும் ரசிகர்கள் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு முண்டியடித்ததால் அந்த இடம் பரபரப்பானது. பாதுகாப்புக் காரணங்களால் நிகழ்ச்சி பாதியிலேயே ரத்துச் செய்யப்பட்டது. கூட்ட நெரிசலில் இருந்து பாது காவலர்கள் உதவியோடு ஷாகித் கபூர் கோபத்துடன் வெளியேறினார், கூட்ட நெரிசலுக்கு நடுவே, கீர்த்தி சனோன், ராஷ்மிகா சிக்கிக்கொண்டனர். உடனடியாக ராஷ்மிகா மந்தனாவைத் தன்கைகளால் அரவணைத்துப் பாதுகாத்தார் கீர்த்தி.
நெருங்கி வந்த ரசிகர்களைப் பாதுகாவலர்கள் தடுத்து, அவர்களை வெளியே பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். நெரிசலில் இருந்து ராஷ்மிகாவை, சகோதரி போல கீர்த்தி பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. கீர்த்தி சனோனின் இந்த பாதுகாப்பு உணர்வை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். அதோடு நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。