




























Updated on
:
1 min read
பிட்காயினில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.10.89 லட்சம் மோசடி செய்த நபர் மீது கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோட்டூர் மண்ணப்பா தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (41), பிட்காயினில் முதலீடு செய்வதாக கூறி தன்னிடம் ரூ.10.89 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஒருவர் ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், "கடந்த ஆண்டு அடையாறில் உள்ள தனியார் திரு மண தகவல் மையத்தில் அசோசி யேட் மேலாளராக தான் பணியாற்றிய போது அங்கிருந்த ரிலேஷன் ஷிப் மேனேஜரான கூடுவாஞ்சேரியை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
14 தவணைகளாக..: விக்னேஷ் தான் 'யுவிசி' என்ற பிட்காயினில் முதலீடு செய்து மாதம் ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்டுவதாகவும், சசிகுமார் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.20 ஆயிரம் லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி, கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மனைவியின் நகைகளை வங்கியில் அடமானம் வைத்தும், தனிநபர் கடன் மூலமாகவும், மருத்துவச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணம் என மொத்தம் ரூ.10.89 லட்சத்தை 14 தவணைகளாக விக்னேஷிடம் வழங்கினேன்.
ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட விக்னேஷ் கூறியபடி லாப தொகையை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் சந்தேக மடைந்து, விக்னேஷ் வசிக்கும் கூடு வாஞ்சேரி பகுதிக்கு சென்று நேரில் விசாரித்த போது, அவர் பிட்காயி னில் எந்த முதலீடும் செய்யவில்லை என்பதும். இதேபோல் பலரிடம் ரூ.40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.
கொலை மிரட்டல்: இது குறித்து கேட்டபோது விக்னேஷ் கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சசி குமார் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் குற்றப் பிரிவுகாவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான போலீஸார், விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。