惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
云风的 BLOG
云风的 BLOG
IT之家
IT之家
C
Check Point Blog
T
The Blog of Author Tim Ferriss
S
SegmentFault 最新的问题
人人都是产品经理
人人都是产品经理
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
美团技术团队
M
MIT News - Artificial intelligence
Jina AI
Jina AI
Blog — PlanetScale
Blog — PlanetScale
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Security Blog
Microsoft Security Blog
G
Google Developers Blog
F
Fortinet All Blogs
V
Visual Studio Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
T
Tailwind CSS Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
MyScale Blog
MyScale Blog
爱范儿
爱范儿
The Cloudflare Blog
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பாகிஸ்தானில் தடை செய்த போதும் நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘துரந...
2026-05-18 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: ​பாகிஸ்​தானில் தடை செய்​யப்​பட்ட போதும் நெட்​பிளிக்ஸ் ஓடிடி தளத்​தில் அந்​நாட்​டில் துரந்​தர்-2 திரைப்​படம் தொடர்ந்து முதலிடத்​தில் நீடிக்​கிறது.

ஆதித்யா தார் இயக்​கத்​தில் துரந்​தர்-1 திரைப்​படம் கடந்த 2025-ம் ஆண்டு வெளி​யானது. இந்​தப் படத்​தில் ரன்​வீர் சிங், அக் ஷய் கன்​னா, ஆர்.மாதவன், உள்​ளிட்​டோர் நடித்​திருந்​தனர். பாகிஸ்​தானில் ரகசிய உளவாளி​யாக ஊடுரு​வும் இந்​தி​ய​ரான ரன்​வீர் சிங்​கின் கதை இது. இந்​தப் படத்​தில் பாகிஸ்​தானுக்கு எதி​ரான காட்​சிகள் இருந்​த​தால் பாகிஸ்​தான் மற்​றும் வளை​குடா நாடு​களில் படத்​துக்​குத் தடை விதிக்​கப்​பட்​டது. எனினும் இந்​தத் திரைப்​படம் ரூ. 1,000 கோடிக்​கும் மேல் வசூலித்து சாதனை படைத்​தது.

இதைத் தொடர்ந்து துரந்​தர்-2 படம் கடந்த மார்ச் 19-ம் தேதி வெளி​யாகி மிகப்​பெரிய வெற்​றியைக் குவித்​துள்​ளது. முதல் பாகத்​தைப் போல​வே, 2-ம் பாகத்தை திரை​யிடு​வதற்​கும் பாகிஸ்​தானில் தடை விதிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் இந்​தத் திரைப்​படம் கடந்த 14-ம் தேதி பாகிஸ்​தானில் நெட்​பிளிக்ஸ் ஓடிடி தளத்​தில் வெளி​யாகி அதிக வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. பாகிஸ்​தான் திரையரங்​கு​களில் வெளி​யிடத் தடை இருந்​தா​லும், நெட்​பிளிக்​ஸில் வெளி​யிடு​வதற்​குத் தடை இல்​லை.

இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் நெட்​பிளிக்ஸ் தளத்​தில் வெளி​யான சில நிமிடங்​களில் படத்​துக்கு அதிக வரவேற்பு கிடைத்​துள்​ளது. அதிக அளவி​லான மக்​கள் இந்​தத் திரைப்​படத்தை ஓடிடி-​யில் காண ஆர்​வம் காட்​டினர். இதனால் ஓடிடி தளத்​தின் சர்​வர் கிராஷ் ஆனது என்று நெட்​பிளிக்ஸ் நிறு​வனத்​தைச் சேர்ந்த அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​துள்​ளார். இதனால் பாகிஸ்​தான் உட்பட பல நாடு​களில் நெட்​பிளிக்ஸ் தளத்​தில் தொடர்ந்து இந்​தத் திரைப்​படம் டிரெண்​டிங்​கில் உள்​ளது. கடந்த சில நாட்​களாக இந்​தப் படம் தொடர்ந்து முதலிடத்​தில் உள்​ளது.

இதுகுறித்து மாவியா உமர் பரூக்கி என்​பவர் கூறும்​போது, “பாகிஸ்​தானில் துரந்​தர் 2 படம் வெளி​யாகும் நேரத்​துக்​காக மக்​கள் ஆர்​வத்​துடன் காத்​திருந்​தனர். ஒரே நேரத்​தில் ஓடிடி தளத்தை லட்​சக்​கணக்​கான மக்​கள் அணுகிய​தால் சர்​வர் கிராஷ் ஆனது” என்​றார். துரந்​தர்​-2-ம் பாகம் வரும் ஜூன் 4-ம் தேதி ஜியோ ஹாட்​ஸ்​டார் தளத்​தில் வெளி​யாக​வுள்​ளது.

போட்டி படத்​துக்கு வரவேற்​பில்லை: துரந்​தர் திரைப்​படத்​தின் கதை​யானது பாகிஸ்​தானில் உள்ள லயாரி பகு​தியை மைய​மாகக் கொண்டு அமைக்​கப்​பட்​டிருந்​தது. துரந்​தர்​-1, துரந்​தர்-2 ஆகிய 2 படங்​களுமே இந்த லயாரி நகர வாழ்க்​கையை வெளிப்​படுத்​தின. இதனால் லயாரி நகர மக்​கள், துரந்​தர் பட லாபத்​தில் தங்​களுக்​கும் பங்கு வேண்​டும் என்று கோரிக்கை எழுப்​பினர்.

இந்​நிலை​யில் துரந்​தர் படத்​துக்கு போட்​டி​யாக பாகிஸ்​தானில், ‘மேரா லயாரி’ என்ற பெயரில் திரைப்​படம் தயாரிக்​கப்​பட்டு கடந்த 8-ம் தேதி வெளி​யானது. ஆனால், இந்​தப் படத்​துக்கு போதிய வரவேற்​பில்​லை. முதல் காட்​சிக்கு வெறும் 22 டிக்​கெட்​கள் மட்​டுமே விற்​பனை​யாகி​யுள்​ள​தாக தெரிய வந்​துள்​ளது.