




















Updated on
:
1 min read
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் வியாழக்கிழமை (14-05-26) அன்று காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுக 59 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைத்துள்ளது. இத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் பல முன்னாள் அமைச்சர்களும் தோல்வியடைந்தனர்.
எனவே, தற்போது நடக்கவுள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும், எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய விதம் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。