




















எம்.பி. ரவிக்குமார் | கோப்புப்படம்
Updated on:
சென்னை: “பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே இருக்கவேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைபாட்டைப் பின்பற்றவேண்டியதில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும்” என விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
“பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே இருக்கவேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைபாட்டைப் பின்பற்றவேண்டியதில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும். மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் இதை முதல்வர் விஜய்யின் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், “பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதல்வரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டியது இல்லை. முதல்வர் விஜய் இது குறித்து முடிவு எடுப்பார்” எனத் தெரிவித்திருந்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。