


























எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் | கோப்புப்படம்
Updated on
:
1 min read
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக கொண்டு புதிய அரசை அமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கடிதம் வழங்கியுள்ளார்.
ஆளுநருக்கு டிடிவி.தினகரன் எழுதிய கடிதத்தில், ‘ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில், தமிழ்நாட்டின் புதிய அரசை அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி உரிமை கோர எனது முழு ஆதரவை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் (167) போட்டியிட்ட எங்கள் கட்சியின் வேட்பாளர் எஸ்.காமராஜ், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினரான எஸ்.காமராஜும், மேற்கண்ட உரிமை கோரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை புதிய அரசை அமைப்பதற்கு அழைக்குமாறும், தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்கச் செய்யுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。