惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
爱范儿
爱范儿
罗磊的独立博客
V
V2EX
量子位
Last Week in AI
Last Week in AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
小众软件
小众软件
博客园 - 【当耐特】
Y
Y Combinator Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
Tailwind CSS Blog
博客园 - 聂微东
Microsoft Security Blog
Microsoft Security Blog
美团技术团队
P
Proofpoint News Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
有赞技术团队
有赞技术团队
MongoDB | Blog
MongoDB | Blog
Recent Announcements
Recent Announcements
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி தேவை: தமிழக அரசுக்கு...
2026-05-24 · via hindutamil

அனிதா ராதாகிருஷ்ணன் | கோப்புப்படம்

Updated on

1 min read

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது விசா​ரணை நடத்த அனு​ம​திக்​கும்​படி தமிழக அரசுக்கு அமலாக்​கத் துறை கடிதம் எழுதி உள்​ளது.

முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணன் வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.2.77 கோடி சொத்து சேர்த்​த​தாக 2006-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்​புத்​துறை வழக்​குப்​ப​திவு செய்​தது. இந்த வழக்​கின் அடிப்​படை​யில், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் குறித்து கண்​டறிய 2021-ம் ஆண்டு அமலாக்​கத்​துறை விசா​ரணையை தொடங்​கியது.

இதன் தொடர்ச்​சி​யாக 2022-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்​பிலான 18 சொத்​துகளை​யும், பின்​னர் சென்​னை, மதுரை மற்​றும் தூத்​துக்​குடி ஆகிய இடங்​களில் உள்ள ரூ.1.21 கோடி மதிப்​பிலான அசையா சொத்​துகளை​யும் அமலாக்​கத்​துறை முடக்​கியது.

கடந்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட போதும், அது இன்​னும் விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​பட​வில்​லை. தற்​போது அமைச்​சர்​கள் அல்​லது முன்​னாள் அமைச்​சர்​கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசின் அனு​மதி தேவை என்​ப​தால், விசா​ரணைக்கு அனு​மதி கோரி அமலாக்​கத் துறை கடந்த 20-ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்​பி​யுள்​ளது.

உச்ச நீதி​மன்​றத்​தின் 'பிர​சாத் ஆச்​சா​ரி​யா' வழக்​கின் தீர்ப்​பை​யும் இதில் அமலாக்​கத்​துறை சுட்​டிக்​காட்​டி​யுள்​ளது. ஏற்​கெனவே முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மீது விசா​ரணை நடத்த அனு​மதி கேட்டு கடிதம் அனுப்​பப்​பட்ட நிலை​யில், 5 நாட்​களுக்கு பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் வழக்​கில் கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ளது. இந்த கடிதத்​தில், “கடிதம் கிடைத்த 120 நாட்​களுக்​குள் மாநில அரசு, விசா​ரணைக்கு அனு​மதி தரவேண்​டும், தவறும் பட்​சத்​தில் அனு​மதி வழங்​கப்​பட்​ட​தாகவே கருதப்​பட்டு உரிய நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இரு கடிதங்​களும் பெறப்​பட்​டதை அரசு அதி​காரி​கள் உறுதி செய்​துள்ள நிலை​யில், தமிழக அரசு இது​வரை எந்த பதி​லும் அளிக்​க​வில்​லை. 120 நாட்​களுக்​குள் அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமலாக்​கத்​துறை​யின் அடுத்​தகட்ட நகர்​வு​கள் இருக்​கும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.