惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
博客园_首页
量子位
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
H
Help Net Security
The Cloudflare Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
A
About on SuperTechFans
腾讯CDC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
D
DataBreaches.Net
L
LangChain Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
月光博客
月光博客
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 聂微东
Hugging Face - Blog
Hugging Face - Blog
雷峰网
雷峰网
C
Check Point Blog
V
V2EX
T
Tailwind CSS Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எந்த அணி​யும் 100% முழுமையானது இல்லை: மனம் திறக்கும் குஜ​...
2026-05-23 · via hindutamil

Updated on

2 min read

அகம​தா​பாத்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணியை 89 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் 230 ரன்​கள் இலக்கை துரத்​திய சிஎஸ்கே அணி 13.4 ஓவர்​களில் 140 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. குஜ​ராத் அணி​யின் பந்​து​வீச்​சில் முகது சிராஜ், காகிசோ ரபா​டா, ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

குஜ​ராத் அணிக்கு இது 9-வது வெற்​றி​யாக அமைந்​தது. இதன் மூலம் அந்த அணி லீக் சுற்றை முதல் 2 இடங்​களுக்​குள் நிறைவு செய்​வதை உறுதி செய்​துள்​ளது. ஏனெனில் குஜ​ராத் அணி​யின் நிகர ரன் ரேட் 0.695 ஆக உள்​ளது. 14 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள குஜ​ராத் அணி 9 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 18 புள்​ளி​களு​டன் லீக் சுற்றை நிறைவு செய்​துள்​ளது.

அதேவேளை​யில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே அணி இந்த தோல்​வி​யால் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​தது. அந்த அணி 14 ஆட்​டங்​களில் 6 வெற்​றி, 8 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​களு​டன் லீக் சுற்றை முடித்​துள்​ளது.

சிஎஸ்கே அணிக்கு எதி​ரான வெற்​றிக்கு பின்​னர் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் சுழற்​பந்து வீச்​சாள​ரான ரஷித் கான் கூறிய​தாவது: ஒவ்​வொரு அணிக்​கும் மேம்​படுத்த வேண்​டிய சில சிறிய விஷ​யங்​களும் இருக்​கும், அதே நேரத்​தில் மிக​வும் வலு​வான சில பகு​தி​களும் இருக்​கும். எந்த அணி​யும் 100 சதவீதம் முழு​மை​யான, கச்​சித​மான அணி​யாக இருக்க முடி​யாது. உங்​களிடம் எவ்​வளவு சிறந்த வீரர்​கள் இருக்​கிறார்​கள் என்​பது முக்​கியமல்ல. இந்​தத் தொடர் முழு​வதும் எங்​களது நடு​வரிசை பேட்​டிங் குறித்து நிறைய விவாதங்​கள் நடந்​துள்​ளன.

ஆனால், இப்​போது ஒவ்​வொரு வீரரும் தங்​கள் பொறுப்பை உணர்ந்து சிறப்​பாகச் செயல்​பட்டு வரு​கிறார்​கள். ஒவ்​வொரு​வரும் தங்​களது பொறுப்பை ஏற்​றுக்​கொள்​கிறார்​கள், அது​தான் மிக​வும் முக்​கி​யம். துல்​லிய​மாக இல்​லாத அந்த 10 சதவீதம் அல்​லது 15 சதவீத விஷ​யங்​களைப் பற்​றியே சிந்​தித்​துக் கொண்​டிருந்​தால், அது மீத​முள்ள 70 முதல் 75 சதவீத அல்​லது 80 சதவீத விஷ​யங்​களை​யும் நிச்​ச​யம் பாதிக்​கும். எங்​களைப் பொறுத்​தவரை, நாங்​கள் விஷ​யங்​களை மிக​வும் எளிமை​யாக வைத்​திருக்​கிறோம்.

எதிரணி யாராக இருந்​தா​லும் சரி, களத்​தில் யாருக்கு வாய்ப்பு கிடைத்​தா​லும் சரி, எவ்​வாறு அதிக தாக்​கத்தை ஏற்​படுத்​தப் போகிறோம் என்​பது​தான் முக்​கி​யம். அது பேட்​டிங், பந்​து​வீச்சு அல்​லது ஃபீல்​டிங் என எது​வாக​வும் இருக்​கலாம். எனவே எங்கே பலவீன​மாக இருக்​கிறோம், எங்கே வலு​வாக இருக்​கிறோம் என்​ப​தைப் பற்றி அதி​கம் யோசிக்க வேண்​டாம். நமக்கு முன்​னால் என்ன இருக்​கிறது, அணிக்கு நான் எப்​படி சிறப்​பாகச் செய்ய முடி​யும் என்​ப​தைப் பற்றி மட்​டுமே யோசிக்க வேண்​டும்.

சிஎஸ்​கேவுக்கு எதி​ரான ஆட்​டத்​தின் போது ஆடு​களத்​தின் தன்மை மாற​வில்​லை. எங்​களு​டைய வேகப்​பந்து வீச்​சுப் பிரிவு, இந்​தத் தொடர் முழு​வதும் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறது. அகம​தா​பாத் ஆடு​களத்​தைப் பொறுத்​தவரை, நல்ல வேகத்​துடன் சரி​யான பகு​தி​யில் தொடர்ந்து பந்​து​வீசி​னால், பந்​து​வீச்​சாளர்​களுக்கு சாதக​மான விஷ​யம் இருக்​கும். அதே​போல், முதலில் பேட்​டிங் செய்து ரன்​களைக் குவிக்​கும் போது ஆடு​களத்​தின் சூழலைப் பார்த்​து​விட்டு அதற்கு தகுந்​தாற்​போல் விளை​யாட முயற்​சிக்க வேண்​டும்.

பந்​து​வீச்சு குழு​வாக​வும், பேட்​டிங் குழு​வாக​வும் ஆடு​களத்​தின் சூழலுக்கு ஏற்ப எங்​களை நாங்​கள் மிக விரை​வாக மாற்​றிக்​கொள்​கிறோம். இது​தான் இந்​தத் தொடர் முழு​வதும் எங்​களுக்​கான முக்​கிய பலமாக உள்​ளது. அந்த வகை​யில் சிஎஸ்கே அணி​யை​விட நாங்​கள் இந்த சூழலுக்​கும் ஆடு​களத்​துக்​கும் மிக விரை​வாக எங்​களை மாற்​றிக்​கொண்​டோம். நாங்​கள் மீண்​டும் வெற்றி பெற்​றதற்கு பின்​னணி​யில் இருக்​கும் காரணம் இது​தான்.

230 ரன்​கள் இலக்கை பாது​காக்​கும் போது பந்​து​வீச்​சில் ரன்​கள் செல்​லத்​தான் செய்​யும். ஆனால் ஒரு பந்​து​வீச்​சாள​ராக நான், ஒரு விஷ​யத்தை எப்​போதும் மாறாமல் வைத்​திருப்​பேன். அந்த வகை​யில் எதிரணி​யின் பேட்​ஸ்​மேன் பந்தை பவுண்​டரிக்கு அடிப்​பதை கடின​மாக​வும் சவாலாக​வும் மாற்ற முற்​சிப்​பேன்.

போட்​டி​யின் போது நல்ல நாட்​களும் இருக்​கும், மோச​மான நாட்​களும் இருக்​கும். மோச​மான நாட்​களி​லும் உங்​களை நீங்​கள் எப்​படி கையாள வேண்​டும் என்​பதை தெரிந்​திருக்க வேண்​டும். தொடர்ந்து சிறப்​பாகவே செயல்​பட்​டு, எந்​தவொரு மோச​மான நாளை​யும் சந்​திக்​க​வில்லை என்​றால், உங்​களால் நிறைய கற்​றுக்​கொள்ள முடி​யாது.

நான் விளை​யாடும் ஒவ்​வொரு போட்​டிக்​குப் பிறகும், பந்து வீசப்​பட்ட இடங்​களின் வரைபடத்தை எனக்கு அனுப்​பு​மாறு வீடியோ பகுப்​பாய்​வாளரிடம் கேட்​பேன். அதில் நான் அதி​கப்​படி​யான பந்​துகளை எங்கே வீசி​யிருக்​கிறேன், இன்​னும் எப்​படி சிறப்​பாகச் செயல்​படலாம் என்று பார்ப்​பேன்.

ஷுப்​மன் கில் ஒவ்​வொரு நாளும் தனது ஆட்​டத்​தில் முன்​னேற்​றம் அடைந்து வரு​கிறார். அவர், ஆடு​களத்​தின் சூழலுக்​கும் மைதானங்​களுக்​கும் ஏற்ப தன்னை மிக விரை​வாக மாற்​றிக்​கொள்​கிறார். அதோடு ஆட்​டத்​தை​யும் மிக விரை​வாகப் புரிந்​து​கொள்​கிறார்.

ஷுப்​மனிடம் இருக்​கும் சிறந்​த விஷ​யம்​ என்​னவென்​றால்​, அவருக்​குத்​ தன்​ ஆட்​டம்​ என்​னவென்​று நன்​றாகத்​ தெரி​யும்​. தனது இன்​னிங்​ஸை எப்​படித்​ தொடங்​க வேண்​டும்​, எப்​படி வேகப்​படுத்​த வேண்​டும்​, அதை எப்​படி முடிக்​க வேண்​டும்​ என்​பது அவருக்​குத்​ தெரி​யும்​. இவ்​​வாறு ரஷித்​ ​கான்​ கூறி​னார்​.