惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
J
Java Code Geeks
Blog — PlanetScale
Blog — PlanetScale
F
Fortinet All Blogs
腾讯CDC
大猫的无限游戏
大猫的无限游戏
Jina AI
Jina AI
WordPress大学
WordPress大学
雷峰网
雷峰网
小众软件
小众软件
D
DataBreaches.Net
V
Visual Studio Blog
博客园 - Franky
IT之家
IT之家
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog RSS Feed
博客园 - 聂微东
T
Tailwind CSS Blog
有赞技术团队
有赞技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
G
Google Developers Blog
云风的 BLOG
云风的 BLOG

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இவர் நம்ம ஆளு... ‘திரைக்கதை மன்னன்’ கே.பாக்யராஜ் முத்திரை...
போத்தி ராஜ்.க · 2026-06-27 · via hindutamil

Updated on: 

‘திரைக்கதை மன்னன்’, வசனகர்த்தா, இயக்குநர், இசையமைப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகப் பரிமாணங்களை தன்னக்தே வைத்திருந்த கே.பாக்யராஜ் எப்போதுமே இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர்களுள் ஒருவராக நினைவுகூரப்படுவார். 1970, 1980, 1990-களில் தமிழ் திரையுலகில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை தனது கதைக்காகவும், வசனத்துக்காகவும், திரைக்கதைக்காகவும் வைத்திருந்தவர் கே.பாக்யராஜ் என்றால் மிகையில்லை.

கே.பாக்யராஜ் திரைபடம் ரிலீஸ் ஆகிறது என்றால், நிச்சயம் படத்தில் ஏதேனும் திருப்பங்களுடன் திரைக்கதை இருக்கும், சுவரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது, நகைச்சுவை, சென்டிமென்ட், பாடல்கள் என அனைத்தும் அற்புதமாக இருக்கும் என்று எண்ணி ரசிகர்கள் சென்று திரைப்படம் பார்த்த காலம் இருந்தது. முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் திரைப்படங்களுக்கு கடும் போட்டியளிக்கும் வகையில் பாக்யராஜின் திரைப்படங்களும் 1980-களில் ஓடின.

தனது குருநாதர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பட்டறையில் இருந்து உருவாக்கப்பட்டவர் பாக்யராஜ். குருநாதர் காலமாகி ஒரு மாதத்துக்குள் அவரின் அற்புதமான சிஷ்யரான கே.பாக்யராஜும் மறைந்திருப்பது திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்பு’

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோயில் கிராமத்தில் 1953 ஜனவரி 7-ம் தேதி பாக்யராஜ் பிறந்தார். இவரின் இயற்பெயர் கிருஷ்ணசாமி பாக்யராஜ். 1977-ம் ஆண்டு பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பாக்யராஜ் பணியில் சேர்ந்து, ‘16 வயதினிலேயே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘கிழக்கே போகும் ரயில்’ படங்களில் பணியாற்றினார்.

இதில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ திரைப்படத்துக்கு வசனத்தையும் பாக்யராஜ் எழுதி இருந்தார். இந்த திரைப்படத்தில் வரும் “இந்த பொம்பளைங்களே இப்படித்தான் எஜமான்... குத்துங்க எஜமான், குத்துங்க...” என்ற வசனம் அந்த காலகட்டத்தில் இளைஞர்களிடையே கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் வைரலாக வலம்வந்த வசனமாகும்.

பாரதிராஜாவுடன் 3 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாக்யராஜுக்கு 4-வது படமான ‘புதிய வார்ப்புகள்’ படத்திலும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், இது அவரே எதிர்பாராத ஜாக்பாட்டாக அமைந்து, அவருக்குள் இருந்த நடிகர் எனும் திறமையை வெளிக்கொணர உதவியது.

பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிவப்பு ரோஜாக்கள்’ ஆகியவை மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், அவர் தயாரிப்பாளராக ‘புதிய வார்ப்புகள்’ மூலம் அறிமுகமானார். பாரதிராஜாவைப் பொறுத்தவரை தன்னுடைய படங்களுக்கு யதார்த்த நாயகர்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

தன்னுடைய ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்துக்கு கதாநாயகனைத் தேடி பாரதிராஜா அலைந்து கொண்டிருந்த நிலையில், திரைப்பட படப்பிடிப்பு தொடங்க ஒருநாள் மட்டுமே எஞ்சியிருந்தபோது, பாக்யராஜை கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்தார். இது பாக்யராஜுக்கே படப்பிடிப்பு தொடங்கும் வரை தெரியாதாம்.

‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் மூலம் பாக்யராஜை முழுமையான வசனகர்த்தாவாகவும், கதாநாயகனாகவும் பாரதிராஜா அறிமுகம் செய்தார். ஆர்.செல்வராஜ் கதையில், பாக்யராஜ் வசனத்தில், பாரதிராஜா இயக்கிய ‘புதிய வார்ப்புகள்’ படம் 1979-ம் ஆண்டு சித்திரை முதல் நாளன்று வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாகி தமிழகத்தின் திரையரங்களில் சக்கைபோடு பேட்டது.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘புதிய வார்ப்புகள்’ நாவலின் தலைப்பை ஏற்று வந்த இந்தத் திரைப்படம் கிராமங்கள், சிறுபட்டி தொட்டிகளில் எல்லாமல் பாக்யராஜை கொண்டு சென்றது. அதிலும் இந்த திரைப்படத்தில் வந்த பாடல்களான ‘வான் மேகங்களே’, ‘இதயம் போகுதே’, ‘தம்தனதம்தன’ பாடல்கள் மக்கள் மனதில் ரீங்காரமிட்டன.

‘புதிய வார்ப்புகள்’தான் பாக்யராஜுக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்தது. பெரிய கண்ணாடி, மூக்கிலேயே பேசும் அவரின் குரல், டான்ஸ் ஆடத் தெரியாத அவரின் உடல் வாகு... இவை அனைத்தையும் ரசிகர்கள் எவ்வாறு ஏற்பார்கள் என்ற கேள்வி இருந்த நிலையில், அவரின் தனித்துவமான நடிப்பையும், வசனத்தையும் ஏற்றுக்கொண்டு அவரைக் கொண்டாடத் தொடங்கினர்.

இயக்குநராக முதல் வெற்றி...

பாரதிராஜா பட்டறையில் இருந்து வெளியேறி தனித்து இயங்கத் தொடங்கிய பாக்யராஜ் 1979-ல் இயக்குநராக பரிமாணம் எடுத்தார். பாக்யராஜ் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் நடிகர்களாக சுதாகர், சுமதி, கவுண்டமணி, கல்லாபெட்டி சிங்காரம், காந்திமதி ஆகியோரை வைத்து ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. திரைப்படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார், பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அதிலும் குறிப்பாக ‘காதல் வைபோகமே’ பாடல் சக்கைபோடு போட்டு மிகப் பெரிய வெற்றிப் படமாக மாறி வசூலை வாரிக் குவித்தது.

இந்தத் திரைப்படத்தில் கல்லாபெட்டி சிங்காரம், கவுண்டமணியின் காமெடி, பாக்யராஜின் வசனங்கள், சுதாகர், சுமதியின், பாக்யராஜின் நடிப்பு ஆகியவை படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருந்தது. குறிப்பாக “சரோஜா குப்பை கொட்டுறியா… கொட்டு கொட்டு” என்ற கவுண்டமனியின் வசனம், கல்லாபெட்டி சிங்காரத்தின் “கையைபிடித்து இழுத்தே வராதவே, கண்ணடிச்சா வரவா போறா”, “டேய் அழகப்பா என்ன பார்த்து இப்படி கேட்டுடியேடா” என்ற கிண்டலான வசனமும் அப்போது மிகப் பிரபலம்.

‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தில் பாக்யராஜின் ஒரு தலைக் காதல், தனது காதலி (சுமதி) துன்பப்படும்போது பாக்யராஜ் செய்யும் உதவி, வறுமையில் குடும்பம் படும் பாடு என அனைத்தையும் மிக இயல்பாக அமைத்திருந்தார்.

கல்லாபெட்டியும் பாக்யராஜும்

நடிகர் ராஜேஷை கதாநாயகனாக அறிமுகம் செய்து, ‘கன்னிப் பருவத்திலேயே’ படத்தை பாக்யராஜ் இயக்கினார். அதுவும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தில் பாக்யராஜ் வில்லன் பாத்திரத்தை ஏற்று நடத்திருந்தார்.

அடுத்ததாக, ‘ஒரு கை ஓசை’படத்தை தானே தயாரித்து, வாய் பேச முடியாத இளைஞராக மிகவும் கடினமான பாத்திரத்தை ஏற்று பாக்யராஜ் நடத்திருந்தார். நடிகை அஸ்வினியை நாயகியாக வைத்து எடுக்கப்பட்ட படமான பாக்யராஜ் நடிப்பில் வெளியான ‘ஒரு கை ஓசை’ ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

அதன்பின் ‘மெளன கீதாங்கள்’, ‘இன்று போய் நாளை வா’ திரைப்படங்கள், பாக்யராஜின் இயக்கத்துக்கு மகுடமாக அமைந்தன. அதிலும் ‘இன்று போய் நாளை வா’ திரைப்படத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பாக்யராஜ் அடிக்கும் லூட்டியும், கதாநாயகியாக வரும் ராதிகாவை காதலிக்க நண்பர்கள் 4 பேருக்குள் ஏற்படும் போட்டியும் படத்தை சுவராஸ்யத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றன. குறிப்பாக கல்லாபெட்டி சிங்காரத்தின் காமெடி, இந்தி வாத்தியாரின் “ஏக் ஹாவ் மே ஏக் கிசான் ரஹெ தாத்தா” என்ற வசனம், படத்தின் அறிமுகமே பாக்யராஜ் செய்யும் சேட்டைகள் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கியது.

அதைத் தொடர்ந்து ‘விடியும்வரை காத்திரு’, ‘அந்த 7 நாட்கள்’, ‘தூறல் நின்னு போச்சு’, ‘டார்லிங், டார்லிங், டார்லிங்’ திரைப்படங்கள் மூலம் தனி முத்திரைப் பதித்தார். அந்தக் காலக்கட்டத்தில் பாக்யராஜ் திரைப்படங்கள் என்றாலே கல்லாபெட்டி சிங்காரத்தின் நகைச்சுவை காட்சிகள் சற்று தூக்கலாகவே அமைந்திருந்தது. ‘கல்லாபெட்டி’ சிங்காரத்தின் நகைச்சுவைத் திறனையை ஒவ்வொரு படத்திலும் பாக்யராஜ் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.

குறிப்பாக ‘டார்லிங், டார்லிங், டார்லிங்’, ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’, ‘இன்று போய் நாளை வா’, ‘அந்த 7 நாட்கள்’ ஆகிய படங்களில் கல்லாபெட்டி சிங்காரத்தின் நகைச்சுவை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. ‘ஒரு கை ஓசை’, ‘பாமா ருக்மணி’, ‘மெளன கீதங்கள்’ படத்திலும் அவர் இருப்பார். கல்லாபெட்டி சிங்காரம் 1966-ம் ஆண்டு ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ திரைப்படத்தில் அறிமுகமாகி நடத்து வந்தாலும், 1979-ம் ஆண்டு ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படம்தான் அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக மாறியது.

நாயக இலக்கணத்தை மாற்றியவர்!

இயக்குநர் என்ற நிலையில் இருந்து நடிப்புக்குள் வந்தபின், பாக்யராஜ் தனது அளவுகோலை நன்கு அறிந்து வைத்திருந்தார். தன்னுடைய உடலமைப்புக்கும், இயல்புக்குக்கும் எந்த மாதிரியான கதாப்பாத்திரங்கள் பொருந்தும் என்பதை உணர்ந்து, அந்தக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.

பாக்யராஜ் தானே இயக்கி நடித்த பல திரைப்படங்களில் கதாநாயகன் வேடம், அவருக்கே உரியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கதாபாத்திரத்தில் வேறு எந்த நடிகரும் நடத்திருந்தால்கூட சிறப்பாக நடத்திருக்க முடியாது என்று பேசவைத்துவிடுவார்.

கதாநாயகன் என்றால் தமிழ்த் திரையுலகத்தில் கடைபிடிக்கப்பட்ட இலக்கணத்தையும், மரபுகளையும் உடைத்து, நடிப்புதான் பிரதானம், வசனம் மற்றும் வலுவான திரைக்கதை இருந்தால் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்பதை பாக்யராஜ் தனது படங்கள் வாயிலாக நிரூபித்தார்.

ஒருவித அப்பாவித்தனம், கேலி - கிண்டல் பேச்சு, ஏமாற்றுத்தனம் போன்ற குணங்கள் கொண்ட பாத்திரங்கள்தான் பெரும்பாலும் அவரின் கதையில் இருந்தன. குறிப்பாக ‘சின்ன வீடு’, ‘முந்தானை முடிச்சு’, ‘எங்கள் சின்ன ராசா’, ‘ராசுக்குட்டி’, ‘இது நம்ம ஆளு’, ‘ஆராரோ ஆரிரரோ’, ‘பவுணு பவுணுதான்’, ‘அம்மா வந்தாச்சு’, ‘சுந்தர காண்டம்’, ‘வீட்ல விசேஷங்க’, ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ போன்ற திரைப்படங்களில் பாக்யராஜுக்கு ஏற்ற அப்பாவித்தனமான வேடம் இருந்தது.

பாக்யராஜ் திரைப்படங்கள் என்றால் ஒரு காலத்தில் நகைச்சுவைக்கு தனியாக நடிகர்கள் வைக்கப்பட்ட நிலையில், காலப்போக்கில் அதை கதாநாயகனோடு, சேர்த்து திரைக்கதையில் கொண்டுவந்தார். நகைச்சுவைக்கென தனியாக டிராக் அமைக்காமல், கதையோடு சேர்ந்து நகைச்சுவை அமைப்பதில் பாக்யராஜ் திரைக்கதைக்கு நிகர் அவரேதான்.

அதிலும் ‘சின்னவீடு’, ‘முந்தானை முடிச்சு’, ‘ராசுக் குட்டி’, ‘இது நம்ம ஆளு’, ‘ஆராரோ ஆரிரரோ’, ‘சுந்தர காண்டம்’ திரைப்படங்களில் நகைச்சுவைக்கென தனியாக நடிகர்கள் இல்லாத நிலையில், அதை கதையோடு அமைத்துக் கொண்டு சென்று படத்தையும் பாக்யராஜ் சூப்பர் ஹிட்டாக்கினார்.

எளிய மக்களுக்கான இயக்குநர்

தனது குருவான பாரதிராஜாவைப் பின்பற்றியே பாக்யராஜும் எளிய மக்களுக்காக, சாமானிய மனிதர்களுக்கான படங்களையே பெரும்பாலும் வழங்கினார். கதாநாயகன் பிம்பத்தை கட்டமைக்க பெரிய பொருட்செலவில் படப்பிடிப்பு நடத்துதல், வெளிநாடு செல்லுதல் போன்றவை ஏதும் இல்லாமலே பாக்யராஜின் பெரும்பாலான திரைப்படங்கள் அமைந்தன.

சமானிய மக்கள் பழக்கப்பட்ட இடங்கள், பொது இடங்கள், கிராமங்கள், சிறிய நகரங்களில்தான் பாக்யராஜின் திரைப்படங்களில் காட்சியமைப்புகள் செய்யப்பட்டன. சினிமாவை சாமானிய மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தாமல், மக்களோடு நெருக்கமாக்கி, அதை வெற்றிகரமாகவும் மாற்றினார்.

பாக்யராஜைப் பொறுத்தவரை அவர் நடிகைகளையோ, சக நடிகர்களின் திறமையையோ, பெரிய தொழில்நுட்பங்களையோ, வெளிநாட்டு காட்சிகளையோ நம்பி படங்களை இயக்கவில்லை. பாக்யராஜ் முழுக்க தனது கதை, திரைக்கதை, வசனம், அளவான நடிப்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மெகா வெற்றி பெற்றது.

அழுகை காட்சியோ, சண்டைக் காட்சியோ, காதல் காட்சியோ, டூயட் பாடலோ எதுவாக இருந்தாலும் தனக்கு ஏற்றார்போல்தான் பாக்யராஜ் காட்சிகளை அமைத்துக்கொண்டார். கதாயநாயகனுக்கான பிம்பத்தை கட்டமைத்து அதற்கேற்றார்போல் காட்சிகளை வைக்காததுதான் அவரின் திரைப்படங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

இளையராஜாவுடன்...

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், பாக்யராஜுக்கும் ஒரு கட்டத்தில் லேசான உரசல் ஏற்பட்டது. பாக்யராஜின் இயக்கத்தில் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானதற்கு அவரின் நடிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம் எந்த அளவு காரணமோ, அதேபோல் இளையராஜாவின் இசையும் வலு சேர்த்தன.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்ட நிலையில், இளையராஜாவை தனது படங்களில் இசை அமைக்க பயன்படுத்துவதை பாக்யராஜ் நிறுத்தினார். சில படங்களுக்கு தானே இசையமைப்பாளராகவும் பாக்யராஜ் மாறினார். ‘இது நம்ம ஆளு’, ‘பவுணு பவுணுதான்’, ‘ஆராரோ ஆரிரரோ’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். அதன்பின் இளையராஜாவுடன் இருந்த மனக்கசப்பு மாறியபின் மீண்டும் இருவரும் சேர்ந்து பணியாற்றினர்.

முத்திரைப் பதித்த படைப்புகள்

1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘சின்னவீடு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. இந்தத் திரைப்படத்தில் பாக்யராஜின் சேட்டைகள், அவரின் கோமாளித்தனமான, வெகுளித்தனமான பேச்சு, மனைவியை நடத்தும் விதம் ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து, வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.

இந்தத் திரைப்படத்தில் ஊர்வசியின் சகோதரி கல்பனாவை அறிமுகம் செய்த பாக்யராஜ், கதாநாயகிக்கென இருந்த இலக்கணத்தையும் மாற்றி அமைத்து நடிப்பு, திரைக்கதை, வசனம்தான் முக்கியம் என்பதை நிரூபித்தார். மேலும், பெண் ஒளிப்பதிவாளராக விஜயலட்சுமியை பாக்யராஜ் துணிச்சலாக அறிமுகம் செய்துவைத்தார். இந்தத் திரைப்படத்தில் வெளியான பாடல்களான ‘அட மச்சமுள்ள’, ‘சிட்டுக்குருவி’, ‘வெள்ளை மனம் உள்ள மச்சான்’ பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

இந்தத் திரைப்படத்தில் பாக்யராஜின் வசனங்கள் அந்தக் காலக்கட்டத்தில் குடும்பப் பெண்களை சற்று கூச்சம் அடையச் செய்ததாக விமர்சனங்கள் வந்தாலும், யதார்த்தமான நடிப்பில், பாக்யராஜ் பாணியிலான அணுகுமுறையால் பெரும்பாலானோரால் ரசிக்கப்பட்டது.

‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் 1983-ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆனது. நடிகை கல்பனாவின் சகோதரி ஊர்வசியை கதாநாயகியாக பாக்யராஜ் அறிமுகம் செய்தார். பெரிய வெற்றிப் படமாக மாறிய ‘முந்தானை முடிச்சு’, பட்டிதொட்டி எங்கும் பல வாரங்களுக்கு ஒரே திரையரங்கில் திரையிடப்பட்டது. அதிகபட்சமாக அந்த காலகட்டத்தில் 25 வாரங்களுக்கு மேல் ஓடிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்தத் திரைப்படத்தில் வெளியான ‘அந்திவரும் நேரம்’, ‘சின்னஞ் சிறு கிளியே’, ‘கண்ணை தொறக்கணும் சாமி’, ‘வா வா வாத்தியாரே’, ‘வெளக்கு வெச்ச நேரத்திலே’ பாடல்கள் இளையராஜா இசையில் இன்றும் ரசிகர்களை கட்டிப்போடக் கூடியவை. இந்த இரு படங்களையும் ஏவிஎம் நிறுவனம் தயாரித்து, பெரும் லாபத்தை ஈட்டியது.

இது நம்ம ஆளு...

1988-ம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் சமூக சிந்தனை உள்ள படமாக ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் வெளியானது. எழுத்துச் சித்தர் என்று அழைக்கக்கூடிய பாலகுமாரன் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நடிகை ஷோபனா, சங்கராபரணம் சோமையாஜுலு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அக்ரஹாரத்தில் வாழும் மக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் வரும் வசனங்கள், திரைக்கதை, பெரிய சமூக சிந்தனை மாற்றத்துக்கானதாக இருந்தது.

1992-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘ராசுக்குட்டி’ திரைப்படம், அவருக்கே உரிய பாணியில் நையாண்டியும், காமெடியும் கலந்த கதையாக இருந்தது. இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. ‘ராசுக்குட்டி’ 1992, தீபாவளியன்று வெளியானது.

இந்தத் திரைப்படம் வெளியானபோது கமலஹாசனின் ‘தேவர் மகன்’, ரஜினிகாந்தின் ‘பாண்டியன்’ திரைப்படமும் ரிலீஸ் ஆனது. இரு பெரிய நடிகர்களின் திரைப்படங்களுடன் போட்டிபோட்ட ‘ராசுக்குட்டி’ வசூலில் சக்கைபோடு போட்டது. நடிகை ஐஸ்வர்யா, மனோரமா, கல்யாணகுமார் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் ராசுக்குட்டியாக வரும் பாக்யராஜ் அணிந்துவரும் வேட்டி, சட்டை, கண்ணாடி, புல்லட் வண்டி ஆகியவையும், செம்புலி பாத்திரமும் பேசப்பட்டது.

1984-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘தாவணிக் கனவுகள்’ திரைப்படம். அவரின் இரு ஆசைகளை நிறைவேற்றியது. முதலாவதாக தனது குருநாதர பாரதிராஜாவை இந்தத் திரைப்படத்தில் நடிக்கவைத்தார். அடுத்ததாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை மையமாக வைத்து கதையை உருவாக்கி நடிக்க வைத்தார். இந்தத் திரைப்படத்துக்கு பூஜை போட்டவுடனே விநியோகஸ்தர்களால் விற்றுத் தீர்ந்தது.

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பு, பாக்யராஜின் காமெடி கலந்த யதார்த்தமான நடிப்பு, தங்கைகளை வைத்துக்கொண்டு அவரின் தவிப்பு, தபால்காரராக வரும் நடிகர் பார்த்திபன், நடிகை ராதிகா என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். படத்தில் கதாநாயகனுக்காக பாரதிராஜா யோசித்து வரும் காட்சியில், பாக்யராஜ் வசனம் பேச, பாரதிராஜா அதைப் பார்த்து வியக்கும் காட்சி படத்தில் திருப்புமுனையாக அமையும்.

தங்கைகளுடன் திரைப்படத்துக்கு சென்றிருக்கையில், காதல் காட்சிகளை தங்கைகள் பார்க்காமல் இருக்க அஞ்சு பைசாவை கீழே போட்டுவிட்டு பாக்யராஜ் தேடச் சொல்லும் காட்சியும் ரசிக்கக் கூடியவை. இந்தத் திரைப்படத்தில் வெளியான ‘ஒரு நாயகன் உதயமாகிறான்’, ‘செங்கமலம் சிரிக்குது’ பாடல்கள் கிராமங்கள்தோறும் சக்கைபோடு போட்டன.

2010-க்குப் பிறகு உறுதுணைக் கதாபாத்திரங்களில் வலம் வரத் தொடங்கிய பாக்யராஜ் தனது உடல்மொழி, இயல்பான நடிப்பால் இளம் தலைமுறையினரையும் வெகுவாக ஈர்த்தார். குறிப்பாக, மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தில் வரும் அவரது கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பாற்றலும் மாஸ்டர் பீஸ் ரகம்.