惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
F
Fortinet All Blogs
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
D
Docker
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
V
Visual Studio Blog
Last Week in AI
Last Week in AI
WordPress大学
WordPress大学
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
L
LangChain Blog
Vercel News
Vercel News
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
P
Proofpoint News Feed
博客园_首页
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
The GitHub Blog
The GitHub Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
C
Check Point Blog
Engineering at Meta
Engineering at Meta
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நடிகை ஸ்ரீதேவி​யின் சொத்துக்கு உரிமை கோரி செங்கை நீதிமன்ற...
2026-05-07 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்​கரை சாலை​யில் 2.7 ஏக்​கர் நிலத்​தை, சம்​பந்த முதலி​யார் என்​பவரது குடும்​பத்​தினரிடம் இருந்து விலைக்கு வாங்​கி​யுள்​ளார்.

கடந்த 37 ஆண்​டு​களாக அந்த சொத்தை ஸ்ரீதே​வி​யின் குடும்​பத்​தினர் அனுப​வித்து வரும் நிலை​யில், சம்​பந்த முதலி​யார் மகன் சந்​திரசேகரனின் 2-வது மனை​வி​யின் மகன் நடராஜன் மற்​றும் மகள் சிவ​காமி ஆகியோர் அந்த சொத்​துக்கு உரிமை கோரி​யும், சொத்​தில் பங்கு கேட்​டும் செங்​கல்​பட்டு கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் உரிமை​யியல் வழக்கு தொடர்ந்​தனர்.

இந்த வழக்கை நிராகரிக்​கக் கோரி ஸ்ரீதே​வி​யின் கணவர் போனிகபூர், அவரது மகள்​கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​களை ஏற்​கெனவே விசா​ரித்த செங்​கல்​பட்டு நீதி​மன்​றம், முழு​மை​யான விசா​ரணைக்​குப் பிறகே சொத்​தின் உரிமை குறித்து முடி​வெடுக்க முடி​யும் என்று கூறி போனி கபூர் மற்​றும் அவரது மகள்​களின் மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்து போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். அதில், ‘அந்த சொத்தை சட்​டப்​படி விலைக்கு வாங்கி அனுப​வித்து வரும் நிலை​யில் போலி வாரிசு சான்​றிதழ் மூல​மாக 37 ஆண்​டு​களுக்​குப் பிறகு தற்​போது சிலர் உரிமை கோரி வழக்கு தொடர்ந்​துள்​ளனர். எனவே, செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை நிராகரிக்க வேண்​டும்’ என்று கோரி​யிருந்​தனர்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி டி.​வி.தமிழ்​செல்​வி, “ஏற்​கெனவே ஸ்ரீதே​வி​யின் குடும்​பத்​தா​ருக்கு எதி​ராக இந்த சொத்​தில் பங்கு கேட்டு நடராஜன் மற்​றும் சிவ​காமி ஆகியோர் தொடர்ந்த வழக்கை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது. ஆனால், அவர்​கள் சொத்தை அபகரிக்​கும் நோக்​கில் செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தி​லும் வழக்கு தொடர்ந்​திருப்​பது ஏற்​புடையதல்ல” என்று கூறி அந்த வழக்கை நிராகரித்​தும், செங்​கல்​பட்டு நீதி​மன்ற உத்​தரவை ரத்து செய்​தும் உத்​தரவிட்டுள்ளார்.