






















Updated on
:
1 min read
மலையாள சினிமாவில் முன்னணிக் கதாநாயகனாக நிரூபித்துவிட்டு, இயக்குநராகவும் ஒரு கை பார்த்தவர்களில் பசில் ஜோசப் முக்கியமானவர். சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் வந்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார்.
தற்போது அவர் ஒரு நாயகனாகவும், அவரது இயக்கத்தில் ‘மின்னல் முரளி’ பிளாக் பஸ்டரில் நடித்த டோவினோ தாமஸ் மற்றொரு நாயகனாகவும் நடித்துள்ள ‘அதிரடி’ என்கிற படத்தை தமிழ் இயக்குநரான அருண் அனிருத்தன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காகச் சென்னை வந்திருந்த பசில் ஜோசப் திருத்தமான தமிழில் பேசினார்: “கடந்த முறை நான் சென்னை வந்தபோது தமிழ் மக்கள் அளித்த பாசம் மறக்க முடியாது. நடிப்பு, இயக்கம் இரண்டில் எனக்கு இயக்கம்தான் அதிகம் பிடித்திருக்கிறது.
நடிப்பது பயணிகள் இருக்கையில் அமர்வது போன்றது. இயக்கம் என்பது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து எல்லாரையும் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பொறுப்பை உணரவைப்பது.
இரண்டையும் ஒருசேரச் செய்வது கடினம். இந்தப் படம் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும். இந்தப் படம் கல்லூரி நிகழ்வு சார்ந்த கதையம்சம் கொண்டது. இது தமிழ் ரசிகர்களுக்கும் உறுதியாகப் பிடிக்கும்” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。