惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
Last Week in AI
Last Week in AI
博客园_首页
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
人人都是产品经理
人人都是产品经理
V
Visual Studio Blog
宝玉的分享
宝玉的分享
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
月光博客
月光博客
T
Tailwind CSS Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
量子位
博客园 - 聂微东
S
SegmentFault 最新的问题
博客园 - 司徒正美
罗磊的独立博客
V
V2EX
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
美团技术团队
小众软件
小众软件
Jina AI
Jina AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அதிகாரிகள் மீதான இடைநீக்கத்துக்கு தடை விதித்தால் துறைரீதி...
செய்திப்பிரிவு · 2026-06-27 · via hindutamil

Updated on: 

சென்னை: மோசடி, குற்​றச்சதி போன்ற குற்​றச்​சாட்​டு​களுக்​குள்​ளான அதி​காரி​கள் மீது எடுக்​கப்​படும் தற்​காலிக இடைநீக்க உத்​தர​வுக்கு தடை விதித்து மீண்​டும் அந்த அதி​காரியையே பணி​யாற்ற அனு​ம​தித்​தால் துறைரீ​தி​யில் நடத்​தப்​படும் விசா​ரணை​யின் புனிதம் கெட்​டு​விடும், அந்த விசா​ரணையே அர்த்​தமற்​ற​தாகிப்​ போய்​விடும் எனக் கருத்து தெரி​வித்​துள்ள சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, திருப்​பத்​தூர் மாவட்ட பதி​வாளரின் இடைநீக்க உத்​தர​வுக்கு தடை விதித்த தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்து உத்​தர​விட்​டுள்​ளனர்.

பத்​திரப்​ப​திவுத் துறை​யில் சமீபத்​தில் திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி மற்​றும் தரு​மபுரி மாவட்ட பதி​வாளர்​களை தற்காலிக இடைநீக்​கம் செய்து பத்​திரப்​ப​திவுத் துறை தலைவர் நடவடிக்கை எடுத்​தார்.

இந்​நிலை​யில் தனக்கு எதி​ரான தற்​காலிக இடைநீக்க உத்​தரவை ரத்து செய்​யக்​கோரி, திருப்​பத்​துார் மாவட்ட பதி​வாள​ரான செந்​துார் பாண்​டியன் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, இடைநீக்க உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதி்த்​திருந்​தார்.

இந்த தடையை நீக்​கக்​கோரி தமிழக பத்​திரப்​ப​திவுத் துறை செயலரும், பதிவுத்​துறைத் தலை​வரும் தாக்​கல் செய்​திருந்த மேல் முறை​யீட்டு மனுவை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, தற்​காலிக இடைநீக்​கம் என்​பது தண்​டனை அல்ல.

குற்​றச்​சாட்டு குறித்த விசா​ரணை​யின்​போது சம்​பந்​தப்​பட்ட அதி​காரி தொடர்ந்து பதவி​யில் நீடிக்கா வண்​ணம் தற்​காலிக​மாக அவரை பதவி​யில் இருந்து விலக்கி வைப்ப​தற்​காக எடுக்​கப்​படும் துறை சார்ந்த நடவடிக்​கையே. இது​போன்ற உத்​தர​வு​களில் நீதி​மன்​றங்​கள் மிகுந்த எச்​சரிக்கை உணர்​வுடன் செயல்பட வேண்​டும்.

மோசடி, குற்​றச் சதி உள்​ளிட்ட குற்​றச்​சாட்​டு​களுக்கு உள்​ளான அதி​காரி​கள் மீதான இடைநீக்க உத்​தர​வுக்கு தடை விதித்து அவரையே பணி​யாற்ற அனு​ம​தித்​தால் துறை ரீதி​யில் நடத்​தப்​படும் விசாரணை​யின் புனிதம் கெட்​டு​விடு​வதுடன் மட்​டுமின்றி அந்த விசா​ரணையே அர்த்​தமற்​ற​தாகி​விடும் எனக் கருத்து தெரி​வித்து, திருப்​பத்​தூர் மாவட்ட பதி​வாளரின் இடைநீக்க உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை வி​தித்து தனி நீதிபதி பிறப்பித்​த உத்​தர​வை ரத்​து செய்​து உத்​தர​விட்​டுள்​ளனர்​.