
















இந்நிலையில் கொல்கத்தாவின் சவுரிங்கிப் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: பாஜகவால் எங்களை தோற்கடிக்க முடியாது. நாங்கள் அநீதிக்கு எதிராகப் போராடுகிறோம். எங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறோம். நான் வங்கத்தில் பிறந்தேன். இந்த வங்கத்திலேயே என் இறுதி மூச்சையும் விடுவேன்.
வங்கத்தில் வெற்றியை உறுதி செய்த பிறகு, நான் டெல்லியை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன். அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைப்பதன் மூலம் நான் இதைச் செய்வேன். எனக்கு அதிகாரப் பதவி தேவையில்லை. டெல்லியில் பாஜக முழுமையாக தகர்க்கப்படுவதையே நான் விரும்புகிறேன். மேற்கு வங்கத்தில் அவர்களின் அழிவு தவிர்க்க முடியாதது. என்றாலும் டெல்லியிலிருந்தும் பாஜக வெளியேற்றப்பட வேண்டும். இவ்வாறு மம்தா ஆவேசமாகப் பேசினார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் இருந்து மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “வங்காளத்தில் மம்தாவுக்கு என்று எதுவும் மிச்சமில்லை. அவர் எப்படி டெல்லிக்கு வருவார்?” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。