惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
J
Java Code Geeks
博客园 - 聂微东
博客园 - 司徒正美
大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
美团技术团队
WordPress大学
WordPress大学
M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
罗磊的独立博客
T
The Blog of Author Tim Ferriss
aimingoo的专栏
aimingoo的专栏
T
Tailwind CSS Blog
The Cloudflare Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
N
Netflix TechBlog - Medium
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து 10 லட்சம் ப...
2026-04-23 · via hindutamil

வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்வதற்காக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று குவிந்த பயணிகள்.

Updated on

2 min read

சென்னை: தேர்​தலில் வாக்​களிப்​ப​தற்​காக, சென்​னை​யில் இருந்து 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் சொந்த ஊர்​களுக்கு புறப்​பட்​டுச் சென்​றுள்​ளனர். ஆம்னி பேருந்​துகளில் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்​ட​தால் பயணி​கள் கடும் சிரமத்​துக்கு ஆளாகினர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் இன்று நடை​பெறுகிறது. சென்​னையைப் பொருத்​தவரை, வெளி மாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​கள் அதிக அளவில் வசிக்​கின்​றனர். அவர்​கள் சென்​னை​யில் தங்கி வியா​பாரம் உள்​ளிட்ட பல்​வேறு வர்த்​தகப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். ஏராள​மான மாணவர்​களும் இங்கு தங்கி உயர்​கல்வி பயின்று வரு​கின்​றனர். அது​மட்​டுமின்​றி, ஏராள​மானோர் தகவல் தொழில்​நுட்​பத் துறை உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

சென்​னை​யில் நீண்ட கால​மாக வசித்​து​வரும் குடும்​பஸ்​தர்​கள் பலரும் சமீபத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​யின்​போது, தங்​கள் வாக்​கு​களை சென்​னைக்கு மாற்​றிக் கொண்​டுள்​ளனர். திரு​மணம் ஆகாதவர்​கள், விடு​தி​களில் தனி​யாக தங்​கி​யுள்​ளவர்​கள், கல்​லூரி மாணவர்​கள் உள்​ளிட்​டோர் தொடர்ந்து தங்​களது வாக்​கு​களை சொந்த ஊரிலேயே வைத்​துள்​ளனர். தீபாவளி, பொங்​கலுக்​குச் செல்​வது​போல, தேர்​தலின்​போதும் இவர்​கள் சொந்த ஊருக்​குச் சென்று தங்​கள் வாக்​கு​களை பதிவு செய்து வரு​கின்​றனர்.

அந்த வகை​யில், இவர்​கள் சொந்த ஊருக்​குச் சென்று வாக்​களிக்க ஏது​வாக, அரசு சார்​பில் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன்​படி, சென்​னை​யில் இருந்து தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களுக்​கும் அரசுப் போக்​கு​வரத்​துக் கழகங்​கள் சார்​பில் கடந்த 21-ம் தேதி முதல் இன்று வரை 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன.

<div class="paragraphs"><p>சென்னை எழும்பூரில் ரயிலில் ஏறுவதற்காக திரண்ட கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்.</p></div>

சென்னை எழும்பூரில் ரயிலில் ஏறுவதற்காக திரண்ட கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்.

அதே​போல, தெற்கு ரயில்வே சார்​பில் மதுரை, கோவை உள்​ளிட்ட இடங்​களுக்கு சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்​பட்​டன. அனைத்து முக்​கிய ரயில் நிலை​யங்​களில் நின்று செல்​லும் வித​மாக இந்த ரயில்​கள் இயக்​கப்​பட்​டன. கடந்த 2 நாட்​களாக இயக்​கப்​பட்ட அனைத்து பேருந்​துகள், ரயில்​களி​லும் பயணி​கள் கூட்​டம் நிரம்பி வழிந்​தது. இதில் இடம் கிடைக்​காதவர்​கள் ஆம்னி பேருந்​துகள், சொந்த வாக​னங்​களில் புறப்​பட்​டுச் சென்​றனர்.

கடந்த 21-ம் தேதி போக்​கு​வரத்து துறை சார்​பில் இயக்​கப்​பட்ட 3,431 பேருந்​துகளில் 1.90 லட்​சம் பேர், ரயில்​களில் 1.50 லட்​சம் பேர், ஆம்னி பேருந்​துகள், சொந்த வாக​னங்​களில் ஒரு லட்​சம் பேர் பயணம் மேற்​கொண்​டனர்.

நேற்று 5,500-க்​கும் மேற்​பட்ட பேருந்​துகள் இயக்​கப்​பட்டு அதில் 3 லட்​சம் பேரும், ரயில்​களில் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோரும் பயணம் மேற்​கொண்​டுள்​ளனர். மொத்​த​மாக கடந்த 2 நாட்​களில் அரசுப் பேருந்​துகள், ரயில்​கள், ஆம்னி பேருந்​துகள், தனி​யார் வாக​னங்​களில் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் வாக்​களிப்​ப​தற்​காக சொந்த ஊருக்கு புறப்​பட்​டுச் சென்​றுள்​ளனர்.

இதே​போல, திருச்​சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை உள்​ளி்ட்ட நகரங்​களில் இருந்​தும் பல்​வேறு பகு​தி​களுக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன. வாக்​குப்​ப​திவு முடிந்த பிறகு, இவர்​கள் சென்னை உள்​ளிட்ட நகரங்​களுக்கு திரும்ப வசதி​யாக இன்​றும், நாளை​யும் கூடு​தல் பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

ஆம்னி பேருந்​தில் கூடு​தல் கட்​ட​ணம்: இதற்​கிடையே, ஆம்னி பேருந்​துகளில் கூடு​தல் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

ஆம்னி பேருந்​துகளை முன்​ப​திவு செய்​யும் இணை​யதளங்​கள், செயலிகளில் ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் நிர்​ண​யித்த அதி​கபட்ச கட்​ட​ணத்​தை​விட ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை கூடு​தலாக கட்​ட​ணம் நிர்​ண​யம் செய்​யப்​பட்​டிருந்​தது.

இதனால் மக்​கள் கடும் சிரமத்​துக்கு ஆளாகினர். போக்​கு​வரத்து துறை மற்​றும் ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் சார்​பில் அறிவிக்​கப்​பட்ட தொலைபேசி எண்​களைத் தொடர்பு கொண்டு பலரும் புகார் தெரி​வித்த நிலை​யில், பயணி​களிடம் கூடு​தலாக வசூலிக்​கப்​பட்ட தொகை திருப்பி வழங்​கப்​பட்​டுள்ளது.

இதுகுறித்து சங்​கத்​தின் தலை​வர் அன்​பழகன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘சங்​கம் நிர்​ண​யித்த அதி​கபட்ச கட்​ட​ணத்​தை​விட கூடு​தலாக சிலர் ஆன்​லைனில் டிக்​கெட் கட்​ட​ணங்​களை வெளி​யிட்​டிருந்​தனர். இதையடுத்​து, தமிழக அரசுத் துறை​யினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்​கப்​பட்​டு, அந்த கட்​ட​ணங்​கள் உடனடி​யாக குறைக்​கப்​பட்​டன.

சில பேருந்​துகளில் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்​ட​தாக வந்த புகார்​களின் அடிப்​படை​யில், பயணி​களிடம் கூடு​தலாக வசூலிக்​கப்​பட்ட தொகை திருப்பி வழங்​கப்​பட்​டது. அதிக கட்​ட​ணம் வசூலிக்​கும் நிறு​வனங்​கள் மீது அரசு சார்பாக நடவடிக்​கைகள்​ எடுக்​கப்​பட்​டு வரு​கின்​றன’ என்​று கூறப்​பட்​டுள்​ளது.