


























பிரபல ராப் பாடகரான வேடன், தமிழ், மலையாளத்தில் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இவர் தனது நண்பர்கள் 8 பேருடன் போதைப் பொருள் விவகாரத்தில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
அப்போது அவர் கழுத்தில் சிறுத்தைப் பல்லுடன் கூடிய செயினை அணிந்திருந்ததாகக் கேரள வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அந்த செயினை ரசிகர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கியதாகவும், அது உண்மையான சிறுத்தைப்பல்தானா என்பது குறித்து தெரியாது என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
அந்த சிறுத்தைப்பல் கொல்கத்தாவில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. ஆய்வில் அது உண்மையான சிறுத்தைப்பல் என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வேடன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கேரள வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。