惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
罗磊的独立博客
博客园 - 聂微东
T
The Blog of Author Tim Ferriss
博客园 - 司徒正美
Stack Overflow Blog
Stack Overflow Blog
F
Fortinet All Blogs
A
About on SuperTechFans
腾讯CDC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
B
Blog RSS Feed
IT之家
IT之家
V
Visual Studio Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
宝玉的分享
宝玉的分享
C
Check Point Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Vercel News
Vercel News
爱范儿
爱范儿
Microsoft Security Blog
Microsoft Security Blog
月光博客
月光博客
T
Tailwind CSS Blog
The Cloudflare Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“யுவராஜ் சிங்​கிடம் பெற்ற பயிற்சியே எனது ஆட்டத்தை மேம்படு...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: இந்​திய கிரிக்​கெட் அணியின் முன்​னாள் வீரர் யுவராஜ் சிங்​கிடம் பெற்ற பயிற்​சியே எனது ஆட்​டத்தை மேம்​படுத்​தி​யது என்று இந்​திய கிரிக்​கெட் அணி வீரரும், சன்​ரைசர்ஸ் ஹைதரா​பாத் அணி​யின் அதிரடி வீரரு​மான அபிஷேக் சர்மா தெரி​வித்​தார்.

ஜியோஸ்​டார் சேனலுக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: கரோனா காலத்​தில் யுவ​ராஜ் சிங்​குடன் இணைந்து பயிற்சி மேற்​கொண்​டது எனக்கு ஒரு மிகப்​பெரிய தருண​மாக அமைந்​தது. நான் சிறு​வயது முதலே அவரை ஒரு முன்​மா​திரி​யாகக் கருதி விளை​யாடி வந்தேன். அவரே எனது ஆதர்ச நாயக​ராகத் திகழ்ந்​தார். ஆரம்ப கால​கட்​டத்​தில் அவர் எனக்​குச் சில வழிகாட்டுதல்களை வழங்​கி​னார் என்​றாலும், நாங்​கள் ஒன்​றாகச் செல​விடப் போதிய நேரம் அமைய​வில்​லை. அதன் பிறகு பொது ஊரடங்கு காலம் வந்​து​விட்​டது.

அந்​தச் சூழலை, குறிப்​பிட்ட சில வீரர்​களு​டன் மிக நெருக்கமாகப் பணி​யாற்​று​வதற்​கான ஒரு வாய்ப்​பாக கருதினேன். இதைத் தொடர்ந்து யுவ​ராஜ் சிங்​குடன் பயிற்சி பெற்று பேட்​டிங் நுணுக்​கங்​களை கற்​றுக் கொண்டேன். யுவ​ராஜ் சிங்​கால்​தான் எனது கிரிக்​கெட் ஆட்​டம் மேம்​பட்​டது. அவரிடம் பெற்ற அனுபவத்​தால் தேசிய அணிக்​காக அதிக அழுத்​த​முள்ள போட்​டிகளில் சிறப்​பாகச் செயல்​படு​வதற்கு மிக​வும் உதவியது.

மேலும் அழுத்​தம் அதி​க​மாக உள்ள போட்​டிகளில் கவனம் செலுத்தி வெற்றி பெறு​வதற்​கான ஒரு வலு​வான மனநிலையை வளர்த்​துக்​கொள்​ள​வும் உதவியது. எங்​கள் பயிற்சி முகாம் தொடங்​கிய​போது, என் நம்​பிக்​கை​யையே அடியோடு மாற்​றியமைத்த ஒரு விஷ​யத்தை யுவ​ராஜ் சிங் என்​னிடம் தெரி​வித்​தார்.

இப்​போது பயிற்சி பெறு​வது சில உள்​ளூர் போட்டிகளுக்கோ அல்​லது ஐபிஎல் போட்​டிகளுக்கோ அல்ல என்​றும், இது​போன்ற பயிற்சி இந்​திய அணிக்​காகப் பெரும் வெற்​றிகளை ஈட்​டித் தர உதவும் என்று யுவ​ராஜ் சிங் அறி​வுறுத்​தி​னார். சர்​வ​தேச கிரிக்​கெட் ஆட்​டங்​களில் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் வகையி​லான ஆட்​டங்​களை வெளிப்​படுத்​த​வும், மிக முக்​கிய​மான தருணங்​களில் பந்​து​வீச்​சின் மூலம் வெற்​றியைத் தேடித்​தர​வும் என்னை அவர் மனரீ​தி​யாகத் தயார்​படுத்​திக் கொண்​டிருப்​ப​தா​கவும் யுவராஜ் சிங் தெரி​வித்​தார்.

கரோனா காலத்​தில் யுவ​ராஜ் சிங் கொடுத்த பயிற்​சியை என்​னால் மறக்​கவே முடி​யாது. நான் இந்த அளவுக்கு கிரிக்கெட்​டில் முன்​னேறி​யிருப்​ப​தற்கு காரணம் அவர்தான். என்​னுடைய தந்தை ராஜ்கு​மார் சர்​மா, பஞ்​சாப் அணிக்​காக ரஞ்சி போட்​டிகளில் விளை​யாடி​யுள்​ளார். அவர் கிரிக்​கெட் பயிற்​சி​யாள​ரும்​ கூட. சிறு​வய​திலிருந்​தே அவரைப்​ ​பார்​த்​து வளர்​ந்​தேன்​. அப்​படியே கிரிக்​கெட்​டும்​ பழகிக்​ கொண்​டேன்​. இவ்வாறு அவர்​ தெரி​வித்​​தார்​.