惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
雷峰网
雷峰网
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学
腾讯CDC
T
Tailwind CSS Blog
A
About on SuperTechFans
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
T
The Blog of Author Tim Ferriss
G
Google Developers Blog
The Cloudflare Blog
D
DataBreaches.Net
Recent Announcements
Recent Announcements
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
博客园 - 聂微东
阮一峰的网络日志
阮一峰的网络日志
月光博客
月光博客
博客园 - 司徒正美
MongoDB | Blog
MongoDB | Blog
Google DeepMind News
Google DeepMind News
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மருமகள் ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முன்னாள் நீதிபதி கிரிபா...
மோகன் கணபதி · 2026-05-28 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: நடிகை​யும் மாடலு​மான ட்விஷா சர்மா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரது மாமியாரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது.

ட்விஷா சர்மா மே 12-ம் தேதி, போபாலில் உள்ள அவரது கணவர் வீட்​டில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். இது தொடர்பாக மே 15-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதே நாளில், போபால் விசாரணை நீதிமன்றம், கிரிபாலா சிங்குக்கு ஜாமின் வழங்கியது. அதேநேரத்தில், ட்விஷா சர்மாவின் கணவர் சமர்த் சிங் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கிரிபாலா சிங்குக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு ரத்து செய்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தேவநாராயண் மிஸ்ரா, “ட்விஷா சர்மா மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவரது மாமியாரான கிரிபாலா சிங் போதிய ஒத்துழைப்பை அளிக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், அவர் மீது தீவிர குற்றச்சாட்டு உள்ள நிலையில் அதன் தீவிர தன்மையை விசாரணை நீதிமன்றம் முறையாக பரிசீலிக்கத் தவறி உள்ளது. எனவே, கிரிபாலா சிங்குக்கு அளிக்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்படுகிறது” என உத்தரிவிட்டார்.

இதையடுத்து, கிரிபாலா சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்​துள்ள முதல் தகவல் அறிக்கையில், ‘ட்விஷா சர்​மா​வின் மாமியாரும், ஓய்​வு ​பெற்ற கூடு​தல் மாவட்ட நீதிப​தி​யு​மான கிரிபாலா சிங், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் நடை​பெற்ற திரு​மணத்​தின்​ போது ரூ.2 லட்​சம் வரதட்சணை கேட்டு கட்டாயப்படுத்​தி​யுள்​ளார்.

இதன்​படி ரூ.2 லட்​சத்தை கொடுத்​துள்​ளனர். திரு​மணம் முடிந்த ஒரு சில மாதங்​களி​லேயே ட்விஷாவுக்கு அவரது கணவர் சமர்த் சிங் மற்​றும் மாமி​யார் கிரி​ பாலா சிங் ஆகியோ​ரால் கடுமை​யான மன உளைச்​சல் ஏற்பட்டுள்ளது.

மேலும், திரு​மணத்​துக்​குப் பிறகு ட்விஷா​வின் அடிப்​படை தேவைகளுக்​குக் கூட அவரது கணவரும் மாமி​யாரும் பணம் கொடுக்க மறுத்​துள்​ளனர். இதனால், ட்விஷா​வின் பெற்​றோர் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வந்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.