惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
博客园_首页
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
T
ThreatConnect
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 聂微东
H
Help Net Security
T
Threat Research - Cisco Blogs
Blog — PlanetScale
Blog — PlanetScale
A
Arctic Wolf
G
Google Developers Blog
量子位
U
Unit 42
I
InfoQ
V
V2EX
F
Fox-IT International blog
P
Privacy & Cybersecurity Law Blog
V
Visual Studio Blog
J
Java Code Geeks
大猫的无限游戏
大猫的无限游戏
C
CERT Recently Published Vulnerability Notes
博客园 - 三生石上(FineUI控件)
T
The Exploit Database - CXSecurity.com
T
Tailwind CSS Blog
SecWiki News
SecWiki News
Know Your Adversary
Know Your Adversary
MyScale Blog
MyScale Blog
宝玉的分享
宝玉的分享
The Hacker News
The Hacker News
Project Zero
Project Zero
Application and Cybersecurity Blog
Application and Cybersecurity Blog
月光博客
月光博客
Recent Commits to openclaw:main
Recent Commits to openclaw:main
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
G
GRAHAM CLULEY
C
Cisco Blogs
I
Intezer
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
O
OpenAI News
Recorded Future
Recorded Future
T
Tenable Blog
W
WeLiveSecurity
腾讯CDC
Stack Overflow Blog
Stack Overflow Blog
T
The Blog of Author Tim Ferriss
www.infosecurity-magazine.com
www.infosecurity-magazine.com
D
Docker
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
PCI Perspectives
PCI Perspectives

hindutamil

கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா கோலாகலம் இந்திய மாணவர்களுக்கு முழு நிதி உதவியுடன் ஜப்பானில் ஆராய்ச்சி வாய்ப்பு ஐ.நா. அமைதிப் படையில் உயிர்த் தியாகம் செய்த 2 இந்திய வீரர்களுக்கு உயரிய விருது எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா 35-வது சுற்று பேச்சுவார்த்தை ரீல்ஸ் மூலம் முதலீட்டை ஈர்க்கும் அமைச்சர் கீர்த்தனா முயற்சிக்கு ஆந்திர அமைச்சர் வரவேற்பு உள்நாட்டில் தயாரிக்கப்படும் 5-ம் தலைமுறை போர் விமானத் திட்டத்துக்கு டாடா, எல்&டி தேர்வு FIFA WC 2026: மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா அணி அறிவிப்பு - பட்டத்தை தக்க வைக்குமா? இந்திய பொருளாதார வளர்ச்சி இந்தோ - பசிபிக் பகுதிக்கு சிறந்த வாய்ப்பு: ஆஸி. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டு போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா, ஈரான் முடிவு? - ட்ரம்ப் அனுமதிக்காக காத்திருப்பு போருக்கு நடுவே இன்னொரு பேராபத்து மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு 20 ஆண்டுக்குப் பின் கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன? விசில் பார்ட்டிக்கு இலைக் கட்சியின் இருவர் வைக்கும் டிமாண்ட் | உள்குத்து உளவாளி நடிகை ட்விஷா மரணத்தில் ஓய்வு பெற்ற நீதிப​தியான மாமியாரை கைது செய்தது சிபிஐ தனி சின்னத்தில் போட்டியிட முஸ்லிம் கட்சிகள் தயங்கியதும் தயாராவதும் ஏன்? அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை இறுதிப் போட்டியில் கால் பதிக்குமா ராஜஸ்தான்? - தகுதி சுற்று 2-ல் இன்று குஜராத் டைட்டன்ஸுடன் மோதல் இளநிலை க்யூட் தேர்வு தேதி மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு திரிணமூல் எம்.பி.அபிஷேக் பானர்ஜி மீது காவல் துறையில் புகார் “சிக்ஸர் அடிப்பதிலேயே கவனம் இருக்கிறது” - சொல்கிறார் சூர்யவன்ஷி மேகேதாட்டு அணை திட்ட விவகாரத்தில் தமிழக அரசு தீவிர ஆலோசனை குவைத் மீது ஈரான் ராணுவம் தாக்குதல்: கேள்விக்குறியாகும் சண்டை நிறுத்தம் சென்னை | ஐ.டி பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது வேளச்சேரியில் மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா கோடை வெப்ப நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் தயார் நிலையில் 360 சுகாதார நிலையங்கள் கென்-பெட்வா நதி இணைப்பு திட்டத்தை பின்பற்றி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர் அதிர்ச்சி தோல்வி பக்ரீத் பண்டிகையில் ராஜஸ்தான் முஸ்லிம்களின் வித்தியாசமான முயற்சி: பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி தேசிய அளவில் கையெழுத்து இயக்கம் கால் இறுதி சுற்றில் பி.வி.சிந்து செல்போனை ஒதுக்கிவிட்டு புத்தகங்களை வாசிக்க வேண்டும்: இளைஞர்களுக்கு கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தல் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோவுக்கு இந்தியா மருத்துவ உதவி ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: தெலுங்கு தேசம் தீர்மானம் கால்பந்தில் இந்திய அணி தோல்வி கேரளாவில் அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கிய 8 பேர் கைது வீர சாவர்க்கரின் 143-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழஞ்சலி கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணிவரன்முறை செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தனி​யார் பள்​ளி​களில் கட்டண விவரங்​களை வெளிப்​படை​யாக தெரிவிக்க நடவடிக்கை: மாநில தகவல் ஆணையம் உத்தரவு தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க அன்புமணி வலியுறுத்தல் தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீதிபதிகளை புனிதர்களாக சித்தரிக்கும் அவசியமில்லை: ‘கருப்பு’ பட வழக்கில் நீதிபதிகள் உத்தரவு தேவையான நிலத்தை கையகப்படுத்த உரிய நடவடிக்கை தேவை: முதல்வருக்கு தெற்கு ரயில்வே பயனாளர் குழு கடிதம் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 29 மே 2026 ஜோதிட நாள்காட்டி 29.05.2026 | வைகாசி 15 - வெள்ளிக்கிழமை “வேட்பாளரல்ல; சின்னத்துக்குதான் மக்கள் வாக்களிக்கின்றனர்” - சவுமியா அன்புமணி கருத்து 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம்: ஜூன் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல் திமுக ஆட்சி திராவிட மாடல் என்றால் தவெக ஆட்சி திருச்சபை மாடல்: ராம.ரவிக்குமார் விமர்சனம் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: தவெக அரசு மீது டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு அரசியல் பயணத்தில் அடுத்து என்ன? - சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தனித்தனியே ஆலோசனை தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை ஜூலை 17, 18-ல் ஆசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு பிளஸ்-2 முடித்த மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை: எமிஸ் தளத்தில் பதிவு செய்ய உத்தரவு முதல்வர் ஆகிறார் டி.கே.சிவக்குமார்: கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறிய திடீர் திருப்பங்கள் சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து: டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய் “நீட் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது” - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி “காசாவை படிப்படியாக கைப்பற்றுங்கள்” - இஸ்ரேல் ராணுவத்துக்கு நெதன்யாகு உத்தரவு யஷஸ்வி ஜெய்ஸ்வால் வேறொரு ஐபிஎல் அணிக்காக விளையாட வேண்டும்: ராயுடு கருத்து விஜய் ஏதாவது வித்தியாசமாக செய்வார் என்று மக்கள் வாக்களித்துள்ளனர்: நடிகர் சிவக்குமார் பேச்சு “வைபவ் சூர்யவன்ஷியை விரைந்து வெளியேற்ற முயற்சிப்போம்” - குஜராத் பயிற்சியாளர் பார்த்தீவ் படேல் நீட் கட்டணத்தை திரும்ப பெற ஜூன் 22 வரை அவகாசம் நீட்டிப்பு மருமகள் ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முன்னாள் நீதிபதி கிரிபாலா சிங் கைது டி.கே.சிவகுமார் உள்ளே... சித்தராமையா வெளியே... - கர்நாடக முதல்வர் ‘பவர் டீலிங்’கில் அடுத்து என்ன? மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமையை பறிக்க முடியாது... ஏன்? ஜூன் 11-ல் சோனியா, ராகுல் காந்தி உடன் முதல்வர் விஜய் சந்திப்பு: கிறிஸ்டோபர் திலக் தகவல் “ராஜ்யசபா வாய்ப்பு வேண்டாம்; மாநில அரசியலில் தொடருவேன்” - சித்தராமையா உயர் கல்வித் துறைக்கு அபாயம்: தவெக அரசுக்கு பெ.சண்முகம் எச்சரிக்கை சென்னையில் 16 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் - தலைமைக் காவலர் கைது சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பீட்டில் ஓஎஸ்எம் சர்ச்சை - ‘பொறுப்பேற்கும்’ தர்மேந்திர பிரதான் கூறியது என்ன? லிவ்-இன் நிபந்தனைகள் - அசாம் ‘யுசிசி’ சொல்வது என்ன? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ "முதல்வர் விஜய்யின் உத்தரவுகள் துளியும் செயல்பாட்டுக்கு வருவதில்லை" - தினகரன் “தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக தரும் ஆதரவே போதுமானது” - மு.வீரபாண்டியன் கருத்து “காவலர் மீது தவெக குண்டர்கள் தாக்குதல்... ” - அரசு மீது வானதி சீனிவாசன் காட்டம் எஸ்ஐஆர் சரியே! - உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ “திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலப் பணிகளை நிறுத்தி, ஊழல் ஒப்பந்தத்தை ரத்து செய்க” - அன்புமணி வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா - வாக்கை காப்பாற்றிவிட்டதாக விவரிப்பு ‘உங்களை உறுத்தவில்லையா?’ - கோடம்பாக்கம் சம்பவத்தை முன்வைத்து முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி தவெகவில் இணைந்தது ஏன்? - அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விளக்கம் இருதரப்பு உறவின் இயல்புநிலைக்கு எல்லையில் அமைதி முக்கியம்: இந்தியா - சீனா ஒப்புதல் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை பிரதமர் மோடி ‘ஹிட்’ கொண்டு விரட்டியடிப்பார்” - தமிழிசை மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 28 - ஜூன் 3 அரசியலில் அடுத்தகட்ட நகர்வு என்ன? - ஆதரவாளர்களிடம் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை மேகாலய சுற்றுலா: மனிதர்களை அமைதிப்படுத்தும் இயற்கையின் பேச்சு! வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம் நடிகர் அர்​ஜுன் தாஸுக்கு திருமணமா? “மாற்றம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக ஏமாற்றத்தையே தந்துள்ளது” - அன்சாரி விமர்சனம் “நம்​மைக் கெடுத்​துக் கொண்டிருக்​கிறது ஏஐ” - கங்கை அமரன் வருத்தம் “தவெகவில் இணைய 90% அதிமுக நிர்வாகிகள் விருப்பம்” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல் புதுச்சேரி, காரைக்காலில் அரசு பள்ளிகள் திறப்பு ஜூன் 4-க்கு தள்ளிவைப்பு “விரைவில் சித்தராமையா ராஜினாமா; டிகே சிவகுமார் முதல்வர் ஆகிறார்” - உறுதிப்படுத்திய கர்நாடக அமைச்சர் பாட்டீல் ‘டபுள் ஆக்​குபன்​சி’ திரைப்​படம் உணர்த்​தி​யது என்ன ? - குஷ்பு விளக்கம் வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சிஇஓ காவ்யா மாறன் ‘மிகப் பெரிய வெற்றியாக நான் நினைக்கவில்லை’ - கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா பகிர்வு திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலப் பணிகளை நிறுத்துக: தவெக அரசுக்கு அன்புமணி கோரிக்கை ஆன்​மிக கதையை மையப்​படுத்தி உரு​வாகும் ‘தத் த்வம் அஸி’ “நாங்கள் அண்ணன் - தம்பி போல் ஒற்றுமையாக இருக்கிறோம்” - எஸ்.பி. வேலுமணி ரீல்ஸ் மூலம் முதலீட்டை ஈர்க்கும் அமைச்சர் கீர்த்தனா: விமர்சனமும், வரவேற்பும் கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா த​யாரிப்பு நிறு​வனம் தொடங்கினார் இயக்​குநர் ரவி அரசு கெயில் சாதனை உடைப்பு; சச்சின் பாராட்டு - புதிய ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சூர்யவன்ஷி!
“தேர்தலில் தொகுதி, வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் முறைகேடு” - ஜோதிமணி குற்றச்சாட்டு
2026-05-29 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சிக்குள் செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தம் தமிழகத்தில் இருந்து தொடங்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. வேட்பாளர்களைத் தேர்வு செய்த பிறகு அதற்குத் தகுந்தது போல தொகுதிகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. சர்வே என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.

கட்சிக்கு நீண்ட காலம் பணியாற்றியவர்களை,வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்கள், வெற்றி வாய்ப்பில்லாத பலருக்கு தொகுதிகள் கேட்டுப்பெறப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற சிலர் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள் கட்சியில் இருந்து விலகுகின்றனர் அல்லது ஒதுங்கிவிட்டனர். இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கியது யார்? எதனடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விசாரணை நடத்தாமல், தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளை மட்டும் விசாரிக்க கமிட்டி அமைப்பது தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமே.

தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டது தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கமிட்டி. அந்தக் கமிட்டி மீதான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டுமே விசாரிக்க முடியும். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொறுப்பாளர்கள் விசாரிக்க முடியாது.

காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே தன்னை சீரமைத்துக் கொள்ள விரும்பினால் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான விசாரணையை முறையாக நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

பல்வேறு மாநிலத் தேர்தல்களில் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. சில நேரங்களில் இதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைகிறது. ஆனால் விசாரணை செய்வதற்குப் பதிலாக தவறு செய்தவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.

தமிழக வேட்பாளர் தேர்வை மிக அருகில் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு வெளிப்படையாகய் தவறுகள் நடப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

இந்த நாட்டை பாஜக, நரேந்திர மோடியிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எவ்வித சமரசமும் இல்லாமல் போராடி வருகிறார்.

ஆனால் கட்சிக்குள் நடக்கும் இதுபோன்ற தவறுகள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை குலைத்து வருகிறது. நாம் ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக களத்தில் நின்று போராடி வெற்றிபெற வேண்டுமானால் கட்சிக்குள் தொண்டர்கள் மாவட்ட, வட்டார தலைவர்களின் குரலுக்கு மதிப்பு இருக்க வேண்டும். நேர்மையோடும், வெளிப்படைத் தனமையோடும் கட்சி செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தம் தமிழகத்தில் இருந்து துவங்கட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாகவும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வில் தனது அதிருப்தியை ஜோதிமணி வெளிப்படுத்தினார். அப்போது அவர், “பேரழிவைத் தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால், நாங்கள் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி, அவர்கள் எண்ணங்களைப் பிரதிபலித்தோம். அவர்களைக் கைவிட்டு விடவில்லை என்கிற திருப்தி மட்டுமே எஞ்சியுள்ளது” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.