惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Vercel News
Vercel News
Y
Y Combinator Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
N
Netflix TechBlog - Medium
MyScale Blog
MyScale Blog
F
Fortinet All Blogs
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
H
Help Net Security
C
Check Point Blog
博客园 - 聂微东
云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
U
Unit 42
WordPress大学
WordPress大学
B
Blog
Last Week in AI
Last Week in AI
人人都是产品经理
人人都是产品经理
T
Tailwind CSS Blog
D
DataBreaches.Net
G
Google Developers Blog
T
The Blog of Author Tim Ferriss
Hugging Face - Blog
Hugging Face - Blog
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
300 ஆண்டுகளுக்குப் பிறகு நெதர்லாந்தில் இருந்து தாயகம் திர...
2026-05-18 · via hindutamil

ஆனைமங்கலம் செப்பேடுகள்.

Updated on

2 min read

நாகப்பட்டினம்/கும்பகோணம்: ​ராஜேந்​திர சோழன் காலத்​திய ஆனைமங்​கலம் செப்​பேடு​கள் சுமார் 300 ஆண்​டு​களுக்​குப் பிறகு நெதர்​லாந்​தில் இருந்து பிரதமர் மோடி மூல​மாக இந்​தியா திரும்​பி​யுள்​ளது.

மாமன்​னன் ராஜ​ராஜ சோழனின் 21-வது ஆட்​சி​யாண்​டில், கி.பி.1005-ல் நாகப்​பட்​டினத்​தில் விஜய கிடாரத்து அரசன் மாறவிஜயோத்​துங்க வர்​ம​னால் கட்​டப்​பட்ட ‘சூளாமணி வர்ம விகாரம்’ என்ற புத்த விகாரத்​துக்கு 97 வேலி பரப்பு கொண்ட ஆனைமங்​கலம் கிராமத்தை ராஜ​ராஜ சோழன் பள்​ளிச்​சந்​த​மாக வாய்​மொழி​யாக தானம் வழங்​கி​னார்.

ராஜ​ராஜன் 1014-ல் உயி​ரிழக்​கும் வரை இச்​சாசனம் உரு​வாக​வில்​லை. அவரது மகன் முதலாம் ராஜேந்​திர சோழன் இதை எழுத்​துப்​பூர்​வ​மாக பட்​ட​யம் வெட்டி உறுதி செய்​தார். 30 கிலோ எடை கொண்ட 21 செப்​பேடு​கள், ஒரு வெண்கல வளை​யத்​தால் பிணைக்​கப்​பட்​டுள்​ளன. வளை​யத்​தில் சோழ அரச முத்​திரை உள்​ளது. 5 ஏடு​கள் வடமொழி​யிலும், 16 ஏடு​கள் தமிழிலும் உள்​ளன.

குலோத்​துங்க சோழன் உறுதி செய்த 3 சிறிய ஏடு​களும் இணைக்​கப்​பட்​டுள்​ளன. சைவ சமயத்தை சார்ந்த ராஜ​ராஜ சோழன், ஒரு புத்த விகாரத்​துக்கு ஊரையே தானம் செய்​தது தமிழ் மன்​னர்​களின் சமய பொறையை காட்​டு​கிறது. தமிழ் ஏடு​கள் அன்​றைய நிர்​வாக சொல்​லாடல், நில அளவை முறை, சட்​டப்​பூர்வ ஆவண மரபை பதிவு செய்​கின்​றன. 11-ம் நூற்​றாண்​டின் சர்​வ​தேச வர்த்​தகம், பவுத்த- சைவ நல்​லிணக்​கம், சோழர்​களின் நிர்​வாகத் திறன், கடல்​கடந்த ராஜதந்​திர உறவுக்கு இது சான்​றாக விளங்​கு​கிறது. சோழர் அரசர் பட்​டியல்,அதி​காரி​கள் பட்​டியல், வென்ற நாடு​கள் குறிப்​பும் உள்​ளது.

18-ம் நூற்​றாண்டு டச்சு ஆதிக்​கத்​தின்​போது ஃப்​ளோரன்​சி​யஸ் கேம்​பர் என்​பவ​ரால் நாகையி​லிருந்து இந்த செப்​பேடு​கள் நெதர்​லாந்து எடுத்​துச் செல்​லப்​பட்​டன. ஹமேக்​கர் குடும்​பத்​தினர் வசம் இருந்​து, 1862-ல் லெய்​டன் பல்​கலைக்​கழக அருங்​காட்​சி​யத்​துக்கு நன்​கொடை​யாக வழங்​கப்​பட்​டன. இவற்றை மீட்டு தமிழகத்​துக்கு கொண்​டுவர வேண்​டும் என்று ஏராள​மான தமிழ் ஆர்​வலர்​கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.

இந்​நிலை​யில்​தான் நெதர்​லாந்து அரசு தற்​போது பிரதமர் மோடி​யிடம் அவற்றை நேரடியாக வழங்கி உள்​ளது. இவற்றை கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் பொது​மக்​கள் பார்​வைக்கு நிரந்​தரமாகக் காட்​சிப்​படுத்த வேண்​டும் என கங்​கை​கொண்ட சோழபுரம் மேம்​பாட்​டுக்​குழும தலை​வர் ஆர்​.கோமகன் வலியுறுத்தியுள்ளார்.

ஆனைமங்​கலம் செப்​பேடு​கள் ஆயிரம் ஆண்​டு​களுக்கு முந்​தைய தமிழனின் கொடைத்​திறன், மதநல்​லிணக்​கம், நிர்​வாக நேர்​மை, சர்​வ​தேச பார்வை ஆகிய​வற்றை பேசும் காலக்​கண்ணாடி​யாக உள்​ளது. அதை கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் காட்​சிப்​படுத்​த வேண்டும் என்பது தமிழ் ஆர்​வலர்​களின் கோரிக்​கை​யாக உள்​ளது.

வைகோ வலியுறுத்தல்: இதனிடையே ஆனைமங்​கலம் செப்​பேடு​களை நாகப்​பட்​டினத்​தில் பாது​காப்​புடன் காட்​சிப்படுத்த மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ வலி​யுறுத்​தி​யுள்​ளார். மேலும் இந்​தச் செப்​பேடு​களை வெறும் நிர்​வாக ஆவணங்​களாகக் கருத​வில்​லை. மத்​தி​ய​கால தென்​னிந்​தி​யா​வில் தமிழ்​நாட்​டின் பன்​முகப் பண்​பாடு மற்​றும் வணி​கத் தொடர்​பு​கள் நிறைந்த உலகின் முக்​கிய தடயங்​களாக திகழ்​கின்​றன.

பல ஆண்டு கால தூதரக முயற்​சிகளுக்கு பிறகு நெதர்​லாந்து அரசு, இந்​தி​யா​விடம் அதி​காரப்​பூர்​வ​மாக ஒப்​படைத்​துள்​ளது. இவற்றை நாகப்​பட்​டினம் அருங்​காட்​சி​யகத்​தில் பாது​காப்​பாக வைத்து பொது மக்​களுக்கு காட்​சிப்​படுத்த மத்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்​டும் என அறிக்கையொன்றில் வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.