惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog
S
SegmentFault 最新的问题
WordPress大学
WordPress大学
P
Proofpoint News Feed
Hugging Face - Blog
Hugging Face - Blog
MyScale Blog
MyScale Blog
A
About on SuperTechFans
雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
T
The Blog of Author Tim Ferriss
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
F
Fortinet All Blogs
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
宝玉的分享
宝玉的分享
罗磊的独立博客
量子位
有赞技术团队
有赞技术团队
V
V2EX
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
45 தொகுதிகளில் 90%க்கு மேல் வாக்குப்பதிவு: 93 சதவீதத்துடன...
2026-04-26 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 45 தொகு​தி​களில் 90 சதவீதத்​துக்கு மேல் வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. அதி​கபட்​ச​மாக கரூர், வீர​பாண்டி தொகு​தி​களில் 93 சதவீதத்துக்கும் மேல் வாக்​கு​கள் பதிவாகி உள்ளன.

தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் கடந்த 23-ம் தேதி ஒரே கட்​ட​மாக நடை​பெற்​றது. அரசி​யல் கட்​சிகளின் வேட்​பாளர்​கள், சுயேச்​சைகள் என மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர். மாநிலம் முழு​வதும் மொத்​தம் 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றிருந்​தனர். அசம்​பா​விதங்​கள் இல்​லாமல் தேர்​தல் அமை​தி​யாக நடந்​தது. 85.10 சதவீதம் பேர் வாக்​களித்​துள்​ளனர். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரலாற்​றில் இது உச்​சபட்ச சதவீத​மாகும்.

இந்த தேர்​தலில் 45 தொகு​தி​களில் 90 சதவீதத்​துக்கு மேல், 151 தொகு​தி​களில் 80 சதவீதத்​துக்கு மேல், 37 தொகு​தி​களில் 70 சதவீதத்​துக்கு மேல் வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. 70 சதவீதத்​துக்கு கீழ் (68.90 சதவீதம்) வாக்​கு​கள் பதி​வான ஒரே தொகுதி பாளை​யங்​கோட்டை மட்​டுமே.

தொகு​தி​யைப் பொருத்​த வரை, தமிழகத்​திலேயே அதி​கபட்​ச​மாக கரூர் தொகுதியில் 93.41 சதவீதம், வீர​பாண்​டி​யில் 93.36 சதவீத வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. கரூரில் மொத்​தம் உள்ள 2.29 லட்​சம் வாக்​கு​களில், 2.14 லட்​ச​மும், வீர​பாண்​டி​யில் மொத்​தம் உள்ள 2.50 லட்​சம் வாக்​கு​களில் 2.33 லட்​ச​மும் பதி​வாகி​யுள்​ளன.

மாவட்ட அளவில் அதி​கபட்​ச​மாக கரூரில் 92.65 சதவீத வாக்​கு​களும், குறைந்​த​பட்​ச​மாக கன்​னி​யாகுமரி​யில் 75.55 சதவீத வாக்​கு​களும் பதி​வாகி​யுள்​ளன.

சென்னை மாவட்​டத்​தில் 83.71 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின. அதி​கபட்​ச​மாக ஆர்​.கே.நகரில் 90.56 சதவீத வாக்​கு​களும், குறைந்​த​பட்​ச​மாக மயி​லாப்​பூரில் 74.84 சதவீத வாக்​கு​களும் பதி​வாகின. முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிடும் கொளத்​தூரில் 86.12 சதவீதம், விஜய் போட்​டி​யிடும் பெரம்​பூரில் 89.74 சதவீதம் வாக்​கு​கள் பதி​வாகின.

வாக்​கு​கள் பதி​வான இயந்​திரங்​கள் அனைத்​தும் வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்ள 62 மையங்​களில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன. வாக்கு எண்​ணிக்கை மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்​கும். முன்​னிலை நில​வரம்​ காலை 11 மணிக்​கு தெரிய​வரு​ம்​.