惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
博客园 - 三生石上(FineUI控件)
V
V2EX
博客园 - 司徒正美
小众软件
小众软件
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
Tailwind CSS Blog
Last Week in AI
Last Week in AI
雷峰网
雷峰网
月光博客
月光博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
S
SegmentFault 最新的问题
美团技术团队
Hugging Face - Blog
Hugging Face - Blog
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
爱范儿
爱范儿
博客园 - 聂微东
量子位
J
Java Code Geeks
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம்: 28-ம் தேதி ...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடியேற்றத்துக்குப்பின் நடைபெற்ற தீபாராதனை. படம்: மு.லெட்சுமி அருண்.

Updated on: 

திருநெல்வேலி:​ திருநெல்​வேலி நெல்​லை​யப்​பர் கோயில் ஆனிப் பெருந்​திரு​விழா கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாக நேற்று தொடங்​கியது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

தமிழகத்​தில் பிரசித்தி பெற்ற சிவால​யங்​களில் ஒன்​றான இக்​கோயி​லில் நடை​பெறும் விழாக்​களில் ஆனி பெருந்​திரு​விழா சிறப்​புமிக்​கது. இத்​திரு​விழா​வின் சிகர நிகழ்ச்​சி​யாக ஆசி​யா​விலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்​லை​யப்​பர் தேர் உள்​ளிட்ட 5 தேர்​களை லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கூடி வடம்​பிடித்து இழுத்து நிலை​யம் சேர்ப்​பர்.

இவ்​வாண்​டுக்​கான ஆனி பெருந்​திரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. அதி​காலை​யில் கோயில் நடை திறக்​கப்​பட்​டு, சுவாமி நெல்​லை​யப்​பர், காந்​தி​மதி அம்​பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. தொடர்ந்​து, தங்க பூங்​கோ​வில் சப்​பரத்​தில் சுவாமி நெல்​லை​யப்​பர், காந்​தி​மதி அம்​பாள் சிறப்பு அலங்​காரத்​தில் எழுந்​தருளி, கோயில் திரு​விழா மண்​டபத்​துக்கு எழுந்​தருளினர். பின்​னர், பெரிய தங்க கொடி மரத்​தின் முன்பு சிறப்பு வழி​பாடு நடத்​தப்​பட்​டு, கொடிபட்​டத்​துக்கு சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. வேத மந்​திரங்​கள் முழங்க, பஞ்ச வாத்​தி​யம் இசைக்க, கோயில் பெரிய தங்க கொடிமரத்​தில் கொடியேற்​றம் நடை​பெற்​றது.

கொடி மரத்​துக்கு சிறப்பு அலங்​காரம் செய்​யப்​பட்​டு, பால், மஞ்​சள், தயிர், இளநீர் உள்​ளிட்டசிறப்பு அபிஷேக திர​வி​யங்​கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. இதைதொடர்ந்து சோடச உபச்​சார மகாதீ​பா​ராதனை நடை​பெற்​றது. இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

இத்திரு​விழா வரும் 29-ம் தேதி நடை​பெறுகிறது. விழா நாட்​களில் தின​மும் காலை​யும், இரவும் வெவ்​வேறு அலங்​கரிக்​கப்​பட்ட வாக​னங்​களில் சுவாமி, அம்​பாள் வீதி​யுலா நடை​பெறுகிறது. திரு​விழா​வில் சுவாமி நெல்​லை​யப்​பர், காந்​தி​மதி அம்​பாள் வெள்ளி ரிஷப வாக​னத்​தில் எழுந்​தருளும் நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி​யும், தங்க சப்​பரத்​தில் கங்​காள நாதர் எழுந்​தருளி வீதி​யுலா வரும் 27 -ம் தேதி​யும் நடை​பெறுகிறது. சிகர நிகழ்ச்​சி​யான தேரோட்​டம் வரும் 28-ம் தேதி நடை​பெறுகிறது. இதற்​கான ஏற்​பாடு​களை கோயில்​ நிர்​வாகம்​ சிறப்​பாகச் செய்​து வருகிறது.