惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
aimingoo的专栏
aimingoo的专栏
WordPress大学
WordPress大学
人人都是产品经理
人人都是产品经理
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
L
LangChain Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
阮一峰的网络日志
阮一峰的网络日志
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
云风的 BLOG
云风的 BLOG
Google DeepMind News
Google DeepMind News
T
The Blog of Author Tim Ferriss
G
Google Developers Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
Y
Y Combinator Blog
D
DataBreaches.Net
Engineering at Meta
Engineering at Meta
MyScale Blog
MyScale Blog
大猫的无限游戏
大猫的无限游戏
S
SegmentFault 最新的问题
The GitHub Blog
The GitHub Blog
Recent Announcements
Recent Announcements

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சித்திரை ப...
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ​திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி சுவாமி கோயில் சித்​திரை பிரம்​மோற்சவ விழா மே 1-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. கருட சேவை 3-ம் தேதி​யும், தேரோட்​டம் 7-ம் தேதி​யும் நடை​பெறுகின்​றன.

108 வைணவ திவ்​யதேசங்​களில் ஒன்​றாக விளங்​கு​வது சென்னை திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெருமாள் கோயில். இத்​தலத்​தில் யோக நரசிம்​மர் மேற்கு நோக்கி அருள்​பாலிக்க, உற்​சவ​ரான தெள்​ளிய சிங்​கர், ஸ்ரீதே​வி, பூதேவி நாச்​சி​யாருடன் பக்​தர்​களுக்கு சேவை சாதிக்​கிறார்.

இங்கு ஆண்​டு​தோறும் பார்த்​த​சா​ரதி சுவாமிக்கு சித்​திரை மாதத்​தி​லும், நரசிம்​மருக்கு ஆனி மாதத்​தி​லும் பிரம்​மோற்​சவம் நடை​பெறு​வது வழக்​கம். அந்த வகை​யில், பார்த்​த​சா​ரதி பெரு​மாள் சித்​திரை பிரம்​மோற்​சவம் மே மாதம் நடை​பெற உள்​ளது.

இதையொட்​டி, ஏப்​.30-ம் தேதி அங்​கு​ரார்ப்​பணம் எனும் முளை​யிடு​தல் விழா நடக்​கிறது. மே 1-ம் தேதி கொடியேற்​றத்​துடன் பிரம்​மோற்​சவம் தொடங்​கு​கிறது. அன்று இரவு 7.45 மணி அளவில் புன்னை வாக​னத்​தில் சுவாமி வீதிஉலா நடை​பெறும்.

மே 2-ம் தேதி காலை 6.15 மணிக்கு சேஷ வாக​னம், இரவு 7.45 மணிக்கு சிம்ம வாக​னத்​தில் உற்​சவர் தெள்​ளிய சிங்​கர் எழுந்​தருள்​கிறார். பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான கருட சேவை மே 3-ம் தேதி நடை​பெறும்.

அன்று அதி​காலை 5 மணிக்கு கோபுர வாசல் தரிசன​மும், இரவு அம்ச வாக​னப் புறப்​பாடும் நடக்​கிறது. 4-ம் தேதி சூரியப் பிரபை வாக​னம், 5-ம் தேதி காலை பல்​லக்​கில் நாச்​சி​யார் திருக்​கோல​மும், இரவு அனு​மந்த வாக​னப் புறப்​பாடும் நடை​பெறுகிறது.

6-ம் தேதி அதி​காலை சூர்​ணாபிஷேகம், அதைத் தொடர்ந்​து, ஆனந்த வாக​னம், இரவு யானை வாக​னப் புறப்​பாடு நடை​பெறுகிறது. பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான தேர்த் திரு​விழா 7-ம் தேதி நடை​பெறுகிறது.

அதி​காலை 3.30 மணி முதல் 4.30 மணிக்​குள் உற்​சவர் தேரில் எழுந்​தருள்​கிறார். காலை 7 மணிக்கு பக்​தர்​கள் வடம் பிடிக்க, தேரோட்​டம் தொடங்​கு​கிறது. இரவு 9 மணிக்கு தோட்​டத் திரு​மஞ்​சனம் நடக்​கிறது.

8-ம் தேதி பல்​லக்​கில் வெண்​ணெய்​தாழி கண்​ணன் திருக்​கோலத்​தில் சுவாமி புறப்​பாடு நடை​பெறுகிறது. 9-ம் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்​லக்​கு, காலை 11 மணிக்கு தீர்த்​த​வாரி நடக்​கிறது. அன்று இரவு கொடி​யிறக்க நிகழ்வு நடை​பெறும். 10-ம் தேதி இரவு 10 மணிக்கு சிறிய திருத்​தேர் நிகழ்​வுடன் பிரம்​மோற்சவ விழா நிறைவடைகிறது.