

























Updated on:
புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் பண மோசடியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ரூ.200 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக டெல்லி போலீஸார் சுகேஷ் மீது பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறை நிதி மோசடி வழக்கு பதிவு செய்தது. மோசடி பணத்தில் தனது காதலியும், பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு விலை உயர்ந்த பொருட்களை சுகேஷ் சந்திர சேகர் பரிசளித்துள்ளார். இதனால் இந்த வழக்கில் மொத்தம் 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தான் அப்ரூவர் ஆக விரும்புவதாக நடிகை ஜாக்குலின் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், சுகேஷ் சந்திர சேகர் நடிகை ஜாக்குலின் உட்பட 22 பேர் மீது மகாராஷ்டிர குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி பட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் சர்மா நேற்று உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய ஜுன் 3-ம் தேதி ஆஜராகும்படி டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。