

























அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி
Updated on:
சென்னை: அதிமுகவில் சி.வி.சண்முகம் அணியில் இருந்த மேலும் 5 எம்எல்ஏக்கள் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததுடன் அமைச்சராகும் கனவில் இருந்தனர். சட்டச் சிக்கல் வரும் என்பதால் தவெக தலைமை அதை ஏற்றுக்கொள்ள வில்லை.
இதையடுத்து சண்முகம் தரப்பில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். மேலும் சிலர் தவெகவுக்கு செல்வார்கள் என்கிற தகவல் வெளியாகி யிருக்கிறது. இதற்கிடையே சண்முகம் தரப்பிடமிருந்து 5 பேர் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நத்தம் விஸ்வநாதன், திருத்தணி அரி, புவனகிரி அருண் மொழித்தேவன், பழனி ரவி மனோகரன், ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் பழனிசாமியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனால் சண்முகம் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், காமராஜ், அன்பழகன், மரகதம் வெற்றிவேல், சேகர், ராகேஷ், விஜயபாஸ்கர், வீரமணி, லீமா ரோஸ், ஆகியோர் இன்னும் பழனிசாமியை சந்திக்கவில்லை எனக் கூறப்படு கிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。