惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
Recent Announcements
Recent Announcements
有赞技术团队
有赞技术团队
The GitHub Blog
The GitHub Blog
N
Netflix TechBlog - Medium
腾讯CDC
A
About on SuperTechFans
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
D
DataBreaches.Net
D
Docker
宝玉的分享
宝玉的分享
量子位
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Martin Fowler
Martin Fowler
博客园 - 三生石上(FineUI控件)
Jina AI
Jina AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
V2EX
Last Week in AI
Last Week in AI
H
Help Net Security
Hugging Face - Blog
Hugging Face - Blog
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலையில் வேலை நிறுத்தம் ம...
2026-04-28 · via hindutamil

Updated on

1 min read

நாமக்கல்: ​வாடகை நிலு​வை தொகையை வழங்​கக் கோரி, தென்​மண்டல காஸ் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் நேற்று காலை வேலை நிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட நிலை​யில், மாலை​யில் போராட்டத்தை வாபஸ் பெற்​றனர்.

நாமக்​கல்லை தலை​மை​யிட​மாகக் கொண்டு தமிழகம், கேரளா, ஆந்​திரா, தெலங்​கா​னா, கர்​நாட​கா, புதுச்​சேரி ஆகிய மாநிலங்​களை உள்​ளடக்​கிய தென்​மண்டல எல்​.பி.ஜி.​காஸ் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் சங்​கம் செயல்​பட்டு வரு​கிறது.

இச்​சங்​கத்​தில் 4,500 காஸ் டேங்​கர் லாரி​கள் உள்ளன. இந்த லாரி​கள் அனைத்​தும் மத்​திய அரசுக்​குச் சொந்​த​மான ஐஓசி, பிபிசிஎல், எச்​பிசிஎல் ஆகிய 3 எண்​ணெய் நிறு​வனங்​களுக்​குச் சொந்​த​மான சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களி​லிருந்து சமையல் எரி​வா​யுவை ஏற்றிக் கொண்டு பாட்​டிலிங் மையங்​களுக்கு எடுத்​துச் செல்வதற்காக ஒப்​பந்த அடிப்​படை​யில் இயக்​கப்​படு​கின்​றன.

இதில், 1,000 எல்​பிஜி காஸ் டேங்கர் லாரிகள் ஐஓசி நிறு​வனத்​துக்காக (இந்​தி​யன் ஆயில் நிறு​வனம்) இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இந்த நிறு​வனம் கடந்த சில ஆண்​டு​களாக டேங்​கர் லாரி உரிமை​யாளர்​களுக்கு ரூ.50 கோடிக்கு மேல் வாடகை வழங்​காமல் நிலு​வை​யில் வைத்​துள்​ளதாக கூறப்படுகிறது.

இந்​நிலை​யில், இந்த வாடகை நிலு​வையை வழங்​கக் கோரி நேற்று காலை முதல் ஐஓசி நிறு​வனத்துக்கு இயக்​கப்படும் காஸ் டேங்கர் லாரிகளில் லோடு ஏற்​றாமல் ஆங்காங்கே நிறுத்தி வேலைநிறுத்​தப் போராட்டத்தில் ஈடு​பட்​டார்கள்.

இதனிடையே, ஐஓசி அதி​காரி​கள், டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் சங்க நிர்​வாகி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது, 2 நாட்​களில் வாடகை நிலு​வைத் தொகை வழங்​கு​வ​தாக உறு​தி​யளித்​தனர். இதை ஏற்​று, டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் நேற்று மாலை வேலைநிறுத்​தப் போராட்​டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்​.