

























Updated on
:
1 min read
பாலகிருஷ்ணா படத்திலிருந்து நயன்தாரா விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், முதலில் தொடங்கவிருந்த வரலாற்று படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால், படத்தின் கதையினை படக்குழுவினர் மாற்றிவிட்டார்கள். தற்போது புதிய கதை முடிவாகி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதனிடையே பல்வேறு படங்களில் நடித்து வருவதாலும், கதை மாற்றத்தாலும் பாலகிருஷ்ணா படத்திலிருந்து விலகியிருக்கிறார் நயன்தாரா. அவருக்கு பதிலாக காஜல் அகர்வாலை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என தெரிகிறது.
விருத்தி சினிமாஸ் தயாரித்து வரும் இப்படம் தசரா வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இதற்கு முன்பாக பாலையா – கோபிசந்த் மாலினேனி கூட்டணியில் உருவான ‘வீரசிம்ஹா ரெட்டி’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு இப்படம் உருவாததால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。