
























ஓய்வுபெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நாவ்லேகர் தலைமையில் செயல்படும் இக்குழுவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருடன் இணைந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி துர்கா சங்கர் மிஸ்ரா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி ஸ்ரீவஸ்தவா, டாக்டர் ஷமிகா ரவி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெறுவர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (வெளிநாட்டினர்-1) இக்குழுவின் உறுப்பினர் செயலாளராகப் பணியாற்றுவார்.
மக்கள் தொகை மாற்றம் என்பது நமது இறையாண்மைக்கு மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, சமூக கட்டமைப்பில் ஏற்படும் ஆழமான மாற்றங்கள், பழங்குடியினச் சமூகத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடனும் தொடர்புடைய ஒரு தீவிரமான பிரச்சினையாகும்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் இயல்புக்கு மாறான காரணங்களால் நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து இக்குழு ஒரு விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளும்.
மத மற்றும் சமூக மட்டத்தில் நிகழும் அசாதாரண மக்கள் தொகை மாற்றங்களின் போக்குகளைப் பகுப்பாய்வு செய்யும். மேலும், இதற்கான ஒரு திட்டமிடப்பட்ட, காலவரையறைக்கு உட்பட்ட தீர்வை முன்வைக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。