惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog
Y
Y Combinator Blog
大猫的无限游戏
大猫的无限游戏
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog RSS Feed
博客园 - Franky
V
V2EX
IT之家
IT之家
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
J
Java Code Geeks
F
Fortinet All Blogs
I
InfoQ
云风的 BLOG
云风的 BLOG
腾讯CDC
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
月光博客
月光博客
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
N
Netflix TechBlog - Medium
宝玉的分享
宝玉的分享
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
P
Proofpoint News Feed
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் - லட்சக...
2026-05-01 · via hindutamil

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நா.தங்கரத்தினம்

Updated on

2 min read

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5ம் நாளான இன்று சித்திரை பவுர்ணமியன்று மதுரை ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் அதிகாலை 5.48 மணியளவில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது ஆற்றில் திரண்டிருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கங்களுடன் தரிசனம் செய்தனர்.

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.27-ல் தொடங்கி மே.6ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் இரண்டு நாட்களான ஏப்.27, ஏப்.28 தேதிகளில் மாலை நேரத்தில் சுந்தர ராஜ பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். மூன்றாம் நாள் (ஏப்.29) சுந்தரராஜ பெருமாள், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி சேலை உடுத்தி, தலையில் கொண்டை, நெற்றியில் சூலாயுதம் போன்ற ஆயுதம், இடுப்பில் ஜமதாடு, கையில் வளைத்தடி, நேரிக்கம்பு ஆகியவற்றுடன் கள்ளழகராக தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.

நான்காம் நாள் (ஏப்.30) மதுரை மாநகர எல்லையான மூன்று மாவடியில் அதிகாலை 5.30 மணியளவில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்று தரிசனம் செய்தனர்.

பின்னர் புதூர் மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில், அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயில், அம்பலகாரர் மண்டகப்படிகளில் எழுந்தருளி, இரவு 8.30 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டார்.

இன்று (மே 1) அதிகாலை கோயிலில் இருந்து புறப்பாடாகி தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன்பு 2.30 மணியளவில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து ஆழ்வார்புரம் வைகை ஆறு நோக்கி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டார். வழிநெடுகிலும் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வரவேற்றனர்.

அப்போது கள்ளழகரை வரவேற்கும் வகையில் எழுத்தாணிக்காரத் தெரு வீரராகவ பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் 4 மணியளவில் எழுந்தருளினர். ஆழ்வார்புரம் மண்டகப்படிகளில் கள்ளழகர் அதிகாலை 4.42 மணிக்கு வருகை தந்தார். பல்வேறு மண்டகப் படிகளில் எழுந்தருளி வைகை ஆற்றில் அதிகாலை 5.40 மணிக்கு வந்தார். அவரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்க அதிகாலை 5.48 மணிக்கு கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.

அப்போது வைகை ஆற்றில் திரண்டிருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். அப்போது நேர்த்திக் கடன் நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் சர்க்கரை தீபம் ஏற்றினர்.

கள்ளழகர், கருப்பணசாமி வேடமணிந்த பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். சந்திப்பு மண்டபமான லாலா ஸ்ரீரெங்க சத்திரம் மண்டகப் படியில் வீரராகவ பெருமாளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் கள்ளழகர் மாலை சாற்றினார். பின்பு இந்து சமய அறநிலையத் துறை மண்டகப் படியில் எழுந்தருளினார்.

இதில் அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், வெங்கடேசன் எம்பி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் 7.35 மணியளவில் அங்கிருந்து ராமராயர் மண்டகப்படிக்கு புறப்பட்டார். அங்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து கள்ளழகரை குளிர்வித்தனர். இன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்குகிறார்.

நாளை (மே 2-ல்) தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும். நாளை மறுநாள் (மே 3-ல்) ராமராயர் மண்டகப்படியில் இருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் செல்கிறார்.

மறுநாள் (மே 4-ல்) ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். கருப்பணசாமி கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளி மலைக்கு திரும்புகிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணியளவில் கோயிலை அடைகிறார். மே 6-ல் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.