





























ஜகதால்பூர் (சத்தீஸ்கர்): பாதுகாப்புப் படையினரின் வீரம், துணிச்சல், ஈடு இணையற்ற தியாகத்தின் காரணமாகவே மார்ச் 31 என்ற காலக்கெடுவுக்கு முன்பாகவே நாட்டில் இருந்து நக்ஸலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜகதால்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “நக்ஸல் இல்லாத இந்தியா என்ற பிரச்சாரத்தில் சில தேதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. டிசம்பர் 13, 2023 சத்தீஸ்கரில் பாஜக அரசு பதவியேற்ற நாள். அன்றுதான் நக்ஸலிசத்தை முழுமையாக ஒழிப்பதற்கான உறுதியான பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
அடுத்து ஆகஸ்ட் 24, 2024. அன்றுதான், மார்ச் 31, 2026-க்குள் நாட்டை நக்ஸல் இல்லாத நாடாக மாற்றத் தீர்மானிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்களின் கூட்டம் கூட்டப்பட்டது. மூன்றாவது தேதி, மார்ச் 31, 2026.
பாதுகாப்புப் படையினரின் வீரம், துணிச்சல், ஈடுஇணையற்ற தியாகத்தின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே நாட்டில் இருந்து நக்ஸலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。