惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
腾讯CDC
博客园 - 司徒正美
A
About on SuperTechFans
H
Help Net Security
J
Java Code Geeks
C
Check Point Blog
B
Blog RSS Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
MongoDB | Blog
MongoDB | Blog
U
Unit 42
Hugging Face - Blog
Hugging Face - Blog
Last Week in AI
Last Week in AI
MyScale Blog
MyScale Blog
V
Visual Studio Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
I
InfoQ
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
F
Fortinet All Blogs
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆட்கொணர்வு மனு எதிரொலி: முன்னாள் காவல் ஆணையர் அருண் ஆஜராக...
செய்திப்பிரிவு · 2026-05-21 · via hindutamil

Updated on: 

சென்னை: கட்​டு​மான நிறுவன உரிமை​யாளர் குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்ட விவ​காரத்​தில் சென்னை மாநகர முன்​னாள் காவல் ஆணை​யர் அருண் ஆஜராக உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை மாதவரம் ரவுண்​டானா அருகே கொளத்​தூர் ராம​தாஸ் நகரில் தேமு​திக எம்​.பி. சுதீஷின் மனைவி பூர்​ணஜோ​திக்கு சொந்​த​மான 2 ஏக்​கர் 10 சென்ட் நிலத்​தில் 234 அடுக்​கு​மாடி வீடு​களை கட்​டி, அதில் 78 வீடு​களை தங்​களுக்கு ஒதுக்​கு​மாறு கட்​டு​மான நிறுவன உரிமை​யாளர் சந்​தோஷ் சர்​மாவுடன் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டது.

ஆனால், சந்​தோஷ் சர்மா போலி​யாக கையெழுத்​திட்டு அந்த 78 வீடு​களை ரூ.43 கோடிக்கு விற்​பனை செய்து தங்​களை மோசடி செய்​த​தாக சுதீஷ் தரப்​பில் போலீ​ஸில் புகார் கொடுக்​கப்​பட்​டது.

இதன்​பேரில் பதிவு செய்​யப்​பட்ட வழக்​கில் கைதான சந்​தோஷ் சர்மா ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார். வீடு​களை வாங்​கிய​வர்​களிடம் அவற்றை ஒப்​படைக்​காமல் ஏமாற்றி விட்​ட​தாக கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்​யப்​பட்டு மீண்​டும் கைது செய்​யப்​பட்​டார்.

இதையடுத்​து, சந்​தோஷ் சர்​மாவை குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின்​கீழ் சிறை​யில் அடைக்​கு​மாறு கடந்த 2025 செப்​.22-ம் தேதி அப்​போதைய சென்னை காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார்.

இதை எதிர்த்து சந்​தோஷ் சர்​மா​வின் மகள் வர்ஷா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்​தார். ‘கடந்த 2019-2023 கால​கட்​டத்​தில் நடந்த சம்​பவம் தொடர்​பாக 2 ஆண்​டு​கள் தாமத​மாக 2025-ம் ஆண்டு குண்​டர் சட்​டத்​தில் எனது தந்​தையை சிறை​யில் அடைத்​துள்​ளனர்.

சுதீஷ் தரப்​பில் அளித்த புகாரில் ஏற்​கெனவே ஜாமீனில் வெளியே வந்த நிலை​யில், மீண்​டும் அதே விவ​காரத்​துக்​காக வீடு​களை வாங்​கிய உரிமை​யாளர்​களிடம் புகார் பெற்று மீண்​டும் 2 வழக்​கு​களை பதிவு செய்து குண்​டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைத்​தது சட்ட விரோதம்.

எனவே, அவர் மீதான குண்​டர் சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும்’ என்று அதில் கோரி​யிருந்​தார். இந்த வழக்கு இறுதி விசா​ரணைக்​காக ஜூன் மாதத்​துக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், தனது கணவருக்கு 4 வாரம் ஜாமீன் வழங்க வேண்​டும் என்று கோரி சந்​தோஷ் சர்​மா​வின் மனைவி கல்​பனா இடைக்​கால மனு தாக்​கல் செய்​தார். நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் அமர்​வில் இந்த மனு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், ‘‘குண்​டர் தடுப்​புச் சட்​டத்தை எதற்கு உபயோகிப்​பது என்​பது ஐபிஎஸ் அதி​காரிக்கு தெரி​யா​தா? சென்னை மாநகர முன்​னாள் காவல் ஆணை​யர் அருண் அடுத்த வாரம் ஆஜராக வேண்​டும்​’’ என உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளிவைத்​தனர்​.