
























விஜய் சேதுதியின் ஏஸ், சிவகார்த்திகேயனின் மதராஸி ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ருக்மணி வசந்த். ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் மூலம் பான் இந்தியா நடிகையாக பிரபலமானார். இப்போது ‘டாக்ஸிக்’, ‘டிராகன்’ படங்களில் நடித்துள்ளார்.
இவர், பிகினி உடையில் காணப்படும் நீச்சல் குள புகைப்படங்கள் கடந்த மாதம் இணையத்தில் வேகமாகப் பரவின. அவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப் பட்டவை என்றும் அதைப் பகிர வேண்டாம் என்றும் ருக்மணி வசந்த் கேட்டுக்கொண்டார். “ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அப்புகைப்படங்கள் முற்றிலும் போலியானவை, ஜோடிக்கப்பட்டவை. அவற்றைப் பரப்பியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கி வருகிறோம்” என்று கூறியிருந்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, மொத்தம் 29 சமூக வலைதளக் கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ஏ.ஐ. மூலம் ருக்மணி வசந்தின் போலியான புகைப்படங்களை வெளியிட்டதாக ரவி குமார் (24), சந்திர காந்த் (33), ரஞ்சித் (25) ஆகியோரை பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。