惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
Stack Overflow Blog
Stack Overflow Blog
B
Blog RSS Feed
C
Check Point Blog
D
Docker
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
Google DeepMind News
Google DeepMind News
MongoDB | Blog
MongoDB | Blog
博客园_首页
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
量子位
有赞技术团队
有赞技术团队
IT之家
IT之家
大猫的无限游戏
大猫的无限游戏
D
DataBreaches.Net
M
MIT News - Artificial intelligence
B
Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
腾讯CDC
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
V
V2EX
月光博客
月光博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அரசியலமைப்...
2026-05-05 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழகத்​தில் மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 தொகு​தி​களில் கட்​டா​யம் வெற்றி பெற்​றிருக்க வேண்​டும்.

தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டு, எந்த கட்​சி​யும் 118 தொகு​தி​களை பெற்​றிருக்​காத நிலை​யில், ஜனநாயக முறைப்​படி அரசி​யலமைப்பு சட்​டப் பிரிவு​கள் 163 மற்​றும் 164-ன்​படி தமிழக ஆளுநர் 4 வழி​முறை​களைக் கையாண்டு அரசி​யல் கட்​சிகளை ஆட்​சி​யமைக்க சட்ட ரீதி​யாக அழைப்பு விடுக்​கலாம்.

அதன்​படி தேர்​தலுக்கு முன்பே அரசி​யல் கட்​சிகள் ஒன்​றாகச் சேர்ந்து கூட்​டணி அமைத்​திருந்​தால் அந்த கூட்​ட​ணியை அழைக்​கலாம். அதிக இடங்​களைக் கைப்​பற்​றிய கட்சி போதிய ஆதர​வுடன் இருந்​தால் அக்​கட்​சியை அழைக்​கலாம். தேர்​தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்​சிகள் தங்​களுக்​குள் கூட்​டணி அமைத்து இருந்​தால் அழைக்​கப்​படலாம்.

பெரும்பான்மை அவசியம்

வெளியி​லிருந்து பெறப்​படும் ஆதர​வுடன் பெரும்​பான்​மையற்ற மைனாரிட்டி ஆட்​சியை அமைக்​கும் கட்​சியை அழைக்​கலாம். இந்த வழி​முறை​களின்​படி ஆட்​சி​யமைக்​கப்​படும் பட்​சத்​தில், சம்​பந்​தப்​பட்ட கட்​சி​யின் சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ராக தேர்​வானவர் முதல்​வ​ராக நியமிக்​கப்​படலாம்.

அதன்​பிறகு அந்த கட்​சி​யின் முதல்​வர் அரசி​யலமைப்பு சட்​டப்​பிரிவு 174-ன்​படி எஸ்​.ஆர்​. பொம்மை வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் கடந்த 1994-ல் பிறப்​பித்த தீர்ப்​பின் அடிப்​படை​யில் அந்த கட்சி சார்​பில் சட்​டப்​பேர​வையைக் கூட்​டு​வார். சட்​டப்​பேர​வை​யில் ஆட்சி அமைத்த கட்சி பெரும்​பான்​மையை நிரூபிக்க வேண்​டும்.

அந்த கட்சி தனிப்​பெரும்​பான்​மைக்​கான பலத்​தை, அதாவது 118 உறுப்​பினர்​களின் ஆதரவு தங்​களுக்கு இருக்​கிறது என்​பதை நிரூபித்​து​விட்​டால் அந்த ஆட்சி எந்​தவொரு பிரச்​சினை​யும் இன்றி தொடரும்.

ஒரு​வேளை அந்​தக் கட்​சி​யால் பலத்தை நிரூபிக்க முடி​யா​விட்​டால் அதற்கு அடுத்த இடத்​தில் உள்ள கட்சி ஆட்​சி​யமைக்​கும் வகை​யில் தங்​களது பெரும்​பான்​மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்​பு​விடுப்​பார்.

அதன்​படி அந்​தக் கட்சி தங்​களது பலத்தை சட்​டப்​பேர​வை​யில் நிரூபித்​து​விட்​டால் அந்த கட்சி ஆட்​சி​யமைக்​கும். இரண்​டாவ​தாக அழைக்​கப்​பட்ட கட்​சி​யும் ஆட்​சி​யமைக்க முடி​யா​விட்​டால் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் பிரிவு 356-ன்​படி குடியரசுத் தலை​வர் ஆட்சி பிரகடனப்​படுத்​தப்​படும். அதன்​பிறகு மீண்​டும் புதி​தாக தேர்​தல் நடத்​தப்​படும்.